பிர்சா முண்டா சிலைக்கு மாலை அணிவிக்கும் பிரதமர் மோடி 
இந்தியா

பிர்சா முண்டா பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை!

Staff Writer

பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி அவரின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

மேலும், பிர்சா முண்டா நாட்டின் பெருமைக்காகவும், பெருமையைக் காக்கவும் எல்லாத்தையும் தியாகம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் உலி ஹாட்டு பகுதியில் பழங்குடியினர் சமூகத்தில் பிறந்த பிர்சா முண்டா, சிறு வயதிலேயே ஆங்கிலேயே ஆட்சி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினார்.

25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், பழங்குடியினரின் நிலம் மற்றும் உரிமைகளைக் காக்கப் போராடினார். இதனால், 'நிலத்தின் தந்தை' எனப் பழங்குடியினரால் அவர் அழைக்கப்பட்டார். தற்போது இவரின் 150-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஜார்க்கண்ட் மாநிலம் உருவான தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிர்சா முண்டாவில் பிறந்தநாளையொட்டி பிகார் மாநிலத்தில் உள்ள நிகழ்ச்சியில் இன்று கலந்துகொள்ளும் பிரதமர் மோடி ரூ.6000 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி தொடங்கிவைக்கிறார். மேலும் பிர்சா முண்டாவின் நினைவை போற்றும் விதமாக தபால் தலை, நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி.

2000 ஆம் ஆண்டு பிர்சா முண்டாவில் பிறந்தநாளையொட்டி பிகார் மாநிலத்தில் இருந்து பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.