அரவிந்த் கெஜ்ரிவால் 
இந்தியா

2 நாள்களில் பதவி விலகுகிறேன் - கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு!

Staff Writer

அடுத்த இரண்டு நாள்களில் தில்லி முதலமைச்சர் பதவியிலிருந்து தான் விலகப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென அறிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு பிப்ரவரிவரை தொடரவேண்டிய தில்லி சட்டப்பேரவைக்கு வரும் நவம்பரில் நடைபெறும் மகாராஷ்டிர மாநிலத் தேர்தலுடன் முன்கூட்டியே தேர்தல் நடத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மணிஷ் சிசோடியாவின் பெயரை முன்னிறுத்தப்போவதில்லை என்று அவர் கூறிவிட்டார்.

முன்னதாக, மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு மைய அரசு திட்டமிட்டு நெருக்கடி தருவதாகவும் அதன் காரணமாக யாரும் பதவிவிலக் கூடாது என்றும் கெஜ்ரிவால் கூறியிருந்தார். அந்த நிலைக்கு மாறாக இப்போது அவர் பேசியுள்ளார்.

மக்களிடம் ஆணையைப் பெற தான் விரும்புவதாகவும் அதற்காக தேர்தலை முன்கூட்டியே நடத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகவும் மக்களின் ஆணை என்னவோ அதைச் செயல்படுத்துவதாகவும் அவர் கூறினார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram