தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 
இந்தியா

ஜம்மு – காஷ்மீர், அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

Staff Writer

ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 2024 செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்துள்ளார்.

அதன்படி, 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள ஜம்மு – காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முறையே, செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளன. வாக்குப் பதிவு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் அட்டவணை

அரியானா

90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள அரியானாவில் அக்டோபர் 1ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் – செப்டம்பர் 12

வேட்பு மனு பரிசீலனை – செப்டம்பர் 13

வாக்குப் பதிவு – அக்டோபர் -1

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் - 4

பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்காக மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் ஜம்மு- காஷ்மீர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலைச் சந்திக்கவுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram