அரியானாவைச் சேர்ந்த 1500 கிலோ எடை கொண்ட அன்மோல் என்ற எருமை மாட்டின் விலையைக் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்...
தினந்தோறும் பாதாம், மாதுளை, முட்டை, பால் என தடல்புடலாக சாப்பிட்டு வளர்ந்துள்ள இந்த எருமையின் விலை ரூ. 23 கோடியாம்!
முரா இனத்தைச் சேர்ந்த அன்மோல் என்ற இந்த எருமை மாட்டின் விந்து அணுக்களுக்கு சந்தையில் ஏகப்பட்ட கிராக்கி இருப்பதால் இந்த விலை என்கிறார்கள்.
எட்டு வயதாகும் அன்மோலுக்கு தினந்தோறும் 250 கிராம் பாதாம், 30 வாழைப்பழம், 4 கிலோ மாதுளை, 5 கிலோ பால், 20 முட்டைதான் அன்றாட உணவாம். இன்னும் உடல் எடையை அதிகரிக்க புண்ணாக்கு, நெய், சோயாபீன்ஸ், சோளம் போன்றவையும் வழங்கப்படுகிறதாம். இதற்காக தினந்தோறும் ரூ. 1500 செலவிடப்படுகிறதாம்.
இதுதவிர ஒவ்வொரு நாளும் இரண்டு முறை குளிப்பாட்டி, அதற்கென அழகிய கூடாரம் அமைத்துப் பார்த்துக்கொள்ளப்படுகிறது. இதற்கெல்லாம் பணம் எங்கே இருந்து வருகிறது என்றால், அன்மோலின் தாய் மற்றும் சகோதரியும் இப்படியே வளர்க்கப்பட்டு பல கோடியில் விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அன்மோலின் விந்தணுக்கள் விற்பனையில் மட்டும் 4-5 லட்சம் மாதந்தோறும் வருவாய் ஈட்டப்படுகிறதாம்.
அன்மோலுக்கு சந்தையில் ஏகப்பட்ட கிராக்கி இருந்தாலும், அதன் உரிமையாளர் கில்லுக்கு இப்போதைக்கு விற்கும் எண்ணமில்லையாம்!
இனி யாராவது எருமை மாடுனு திட்டுவீங்க...!