திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்படம் செய்யப்பட்டது உண்மைதான் என்று தேவஸ்தானத்து செயல் அதிகாரி சியாமளா ராவ் கூறியுள்ளார்.
திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம், அரசியல் கட்சிகளுக்கு இடையிலான சர்ச்சையாக இருந்துவருகிறது. இதுகுறித்து முதலில் கருத்து எதையும் தெரிவிக்காமல் அமைதிகாத்துவந்த தேவஸ்தானம் முதல் முறையாக வாய்திறந்துள்ளது.
ஆய்வக சோதனையில் லட்டு தயாரிக்கு வழங்கப்பட்ட நெய்யின் தரம் சரியில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது; ஒப்பந்தம் எடுத்திருந்த திண்டுக்கல் ஏ.பி. பண்ணை வழங்கிய நெய் மோசமான தரத்தில் இருந்தது என்றும் செயல் அலுவலர் சியாமளா ராவ் ஊடகத்தினரிடம் கூறியுள்ளார்.
”நான்கு தொட்டிகளில் வந்த நெய் மோசமான தரத்தில் இருந்ததைக் கண்டறிந்தோம். அந்த சப்ளையருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறோம். குஜராத்தில் உள்ள எண்டிடிபி ஆய்வகத்துக்கு நெய் மாதிரிகளை அனுப்பியிருக்கிறோம்.” என்றும் சியாமளா ராவ் தெரிவித்தார்.