பூமியிலிருந்து 9.2 இலட்சம் கி.மீ. தொலைவைக் கடந்து ஆதித்யா எல்-1 விண்கலம் தன் பயணத்தைத் தொடர்கிறது.
கடந்த 2ஆம் தேதி சூரியப் புறவெளியை ஆய்வுசெய்ய இஸ்ரோவால் அனுப்பிவைக்கப்பட்ட ஆதித்யா விண்கலம், கடந்த 19ஆம் தேதி புவிவட்டப் பாதையிலிருந்து விலக்கப்பட்டது.
அடுத்து சூரியனைச் சுற்றும் ஒரு வட்டப் பாதையை நோக்கி அது தன் பயணத்தைத் தொடர்ந்து. இன்று ஆதித்யா விண்கலம் பூமியிலிருந்து 9.2 இலட்சம் கி.மீ. தொலைவைக் கடந்து, முற்றிலுமாக புவிக் கோள் புலத்திலிருந்தும் விடுபட்டது.
ஆதித்யாவின் பயணமானது இனி முழுக்க முழுக்க 15 இலட்சம் கி.மீ. தொலைவில் உள்ள இலாக்ராஞ்சியன் புள்ளி-1-ஐ நோக்கியதாக மட்டுமே இருக்கும்.
இஸ்ரோவைப் பொறுத்தவரை, இது இப்படியான இரண்டாவது சாதனை எனலாம். முன்னதாக, செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலம் இதைப் போல பூமியின் கோள் புலத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு பணி செய்தது தெரிந்ததே!