அந்த சர்ச்சைக்குரிய காட்சி 
இந்தியா

போலீஸ் வேனில் பீர் குடிக்கும் கொலைக்குற்றவாளி... இதுதானா உங்க மது விலக்கு?

Staff Writer

குஜராத் மாநிலத்தில் போலீஸ் வேனிலேயே கொலைக்குற்றவாளி ஒருவர் பீர் அருந்து காணொளிக் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை கிளப்பி உள்ளன. இத்தனைக்கு மது விலக்கு அமலில் உள்ள மாநிலம் குஜராத் என்பதால் இது மேலும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் அஹமதாபாத் மாவட்டத்தில் 75 வயதாகும் ஒரு பெரியவரை அடித்து காலை உடைப்பதற்காக ஜாலா என்கிற கூலிப்படை ஆளை அனுப்புகிறார் ஒருவர். ஆனால் அடிபட்டவர் இறந்துவிட்டார். அவர் இறந்து ஒரு வாரம் கழித்து ஜாலாவை கைது செய்கிறார்கள்.

அதன் பிறகு கிட்டத்தட்ட இரு பது நாள் கழித்து ஜாலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலீஸ் வேனில் அமர்ந்து பீர் அருந்துவதாக வீடியோ வெளியானது.

அதுமட்டுமல்ல தான் கைதானதை இன்ஸ்டா பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார். போலீசார் பிடியில் இருக்கும் பல வீடியோக்களும் அப்பக்கத்தில் உள்ளன. செல்போன் வைத்துக்கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டதையும் இது காட்டுகிறது.

அஹமதாபாத் போலீஸ் இதை மறுத்ததுடன் இதை விசாரிப்பதாக வழக்கம் போல் சொல்லுகிறது.

மதுவிலக்கு நிலவும் மாநிலம்; அதுவும்  போலீஸ் கஸ்டடியில் இருக்கும் கொலைக்குற்றவாளில் பீர் அருந்து காட்சியை அவரே இன்ஸ்டாகிராமில் போடுவாராம்!

எங்க போய்கொண்டிருக்கிறது நாடு? மதுவிலக்குக்கும் மரியாதை இல்லை! பொலீஸ் கைதுக்கும் மரியாதை இல்லை.. என இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆயின.