நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழாவது கட்டமாக இன்று நடைபெற்று முடிவடைந்தது. மாலை 5 மணிநிலவரப்படி 58.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு முறை வன்முறைகள் அரங்கேறின.
வாக்கு இயந்திரத்தை உடைத்தெறிந்து குளத்தில் வீசிய சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது.
ஜாதவ்பூரில் இன்று காலையிலேயே தெற்கு பர்கானா மாவட்டத்தில் குல்தாலி எனும் இடத்தில் ஒரு கும்பல் வாக்குப்பதிவி இயந்திரத்தை குளத்தில் தூக்கி வீசியது. சம்பவம் குறித்து வாக்குப்பதிவு அதிகாரிகள் புகார் அளித்தனர்.
பிறபகலில் ஜாதவ்பூர் பாங்கர் பகுதியில் காலையில் மோதல் ஏற்பட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தி கும்பலைக் கலைத்தனர். முன்னதாக, நேற்று இந்திய சமயச்சார்பற்ற முன்னணி வேட்பாளர் நூர் கானின் கார் உடைத்து நாசமாக்கப்பட்டது.
மற்றபடி, ஏழு மாநிலங்கள், ஒரு மைய ஆட்சிப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் அமைதியாகவே நடந்துமுடிந்தது என தகவல்கள் கிடைக்கின்றன.