மக்களவைத் தேர்தல் வடிவமைப்பு - எஸ்.கார்த்தி
இந்தியா

மக்களவைத் தேர்தல்: ஓய்ந்தது 6ஆம் கட்டப் பிரச்சாரம்!

Staff Writer

மக்களவைத் தேர்தலுக்கான ஆறாம் கட்டத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில், இதுவரை 5 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தற்போது வரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

ஆறாம் கட்டமாக 7 மாநிலங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நாளைமறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பீகாரில் 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், தில்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8, ஜம்மு காஷ்மீரில் 1 என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடக்கும்நிலையில், அங்கு 42 சட்டமன்றத் தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், ஆறாம் கட்டத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இதனால் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடப்பதால் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செய்துவருகிறது.

ஆறாம் கட்டம் முடிந்தவுடன் வரும் ஜூன் 1ஆம் தேதி 57 தொகுதிகளுக்கான 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.