கடந்த பத்து நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்துவரும் அணிகலன் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை சவரனுக்கு 55ஆயிரத்து 680 ரூபாயாக அதிகரித்தது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து 6,960 ரூபாய்க்கும் தங்கம் விற்பனை ஆகிறது.
நேற்று வெள்ளியன்று அணிகலன் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து, விலை 55,080 ரூபாய் ஆனது.
அதற்கு முந்தைய மூன்று நாள்களிலும் விலை குறைந்தபடி இருந்தது. கடந்த 16ஆம் தேதி ஒரு சவரன் அணிகலன் தங்கத்துக்கு 55,040 ரூபாய், மறுநாளன்று 54,920 ரூபாய், 18ஆம் தேதி 54,800 ரூபாய், 19ஆம் தேதி 54,600 ரூபாய் என விலை நிலவரம் இருந்தது.
உலக அளவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சத்துக்குச் சென்ற தங்கத்தின் விலை, ஜூலையில் மத்திய நிதிநிலை அறிக்கையால் திடீரெனக் குறைந்தது. ஆனால், ஒரே வாரத்தில் மீண்டும் விலை உயரத் தொடங்கியது. அதன்பிறகு விலை உயர்வும்குறைவும் தொடர்ந்துவருகிறது.