தங்கத்தின் விலை கடந்த நான்கு நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,480 உயா்ந்திருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,920-க்கு விற்பனையான நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் அக்டோபர் 16-இல் பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.57,120-க்கும், அக்டோபர் 17-இல் பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.57,280-க்கும், அக்டோபர் 18-இல் பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,920-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,240-க்கும் விற்பனையாகி வருகிறது.
கடந்த நான்கு நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,480 உயா்ந்துள்ளது.
அதேபோல், வெள்ளி விலை தொடா்ந்து 5-ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனையான நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.105-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,000 உயா்ந்து ரூ.1,05,000-க்கும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.105.10-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 உயர்ந்து ரூ.1,05,100-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் தங்கம் விலை பவுன் ரூ.60,000-ஐ தொடக்கூடும் என்று கூறுகின்றனர்.