Moneyதர்கள்

விலை உயர்ந்த ஓட்டல்

Staff Writer

ராயல் பென்ட்ஹவுஸ் சூட், ஓட்டல் பிரசிடெண்ட், ஜெனிவா, சுவிட்சர்லாந்து: ஓர் இரவு  தங்க: 41 லட்சம் ரூபாய்.  1800

சதுரமீட்டர் அறையில் இருந்து ஜெனிவா ஏரியும் ஆல்ப்ஸ் மலையும் தெரியும். அருமையான ஓவியங்கள், 103 இஞ்ச் பிளாஸ்மா டிவி, ஸ்டீன்வே கிராண்ட் பியானோ ஆகியவை உண்டு.

டி வார்னர் பெண்ட் ஹவுஸ், போர்சீசன்ஸ் ஓட்டல், நியூயார்க்: ஓர் இரவு தங்க:  27.5 லட்சம் ரூபாய். ஐம்பது மில்லியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்ட ஓட்டல் இது. 18ஆம் நூற்றாண்டின் ஜப்பானிய பட்டுத் தலையணைகள் இந்த அறையின் சிறப்பம்சம். நகரின் உயரமான ஓட்டல் இது. அறையில் தனி நூலகம் உள்ளது.

ஹில்டாப் எஸ்டேட் உரிமையாளர் தங்குமிடம், லாகாலா தீவு ரிசார்ட், பிஜி: ஓர் இரவு தங்க:24.4 லட்சம் ரூபாய். இங்கே தங்கவேண்டுமானால் முதலில் இதற்காக விண்ணப்பம் அனுப்பவேண்டும். இதன் உரிமையாளர் அழைத்தால் மட்டுமே போய் தங்க இயலும். இங்கு 25 வில்லாக்கள் உள்ளன. குதிரையேற்றம், ஸ்பாவில் மசாஜ், அருமையான சாப்பாடு ஆகியவை சிறப்பு அம்சங்கள்.

காபி மனிதர்

எளிமையாகச் சொன்னால் அமெரிக்காவில் ஒரு காபி கடைக்காரர்தான் ஹோவார்ட் சட்ஸ். ஆனால் அவர் அமெரிக்கர்கள் காபி குடிக்கும் விதத்தை மாற்றி காபிஷாப் கலாசாரத்தைப் புகுத்தி பெரும் கார்ப்பரேட் நிறுவனமாக தன் காபி கடையை மாற்றியவர்.

இளம் வயதில் ஹோவார்டுக்கு இருந்த கனவெல்லாம் வறுமையில் இருந்து  மீண்டு பெரும் பணக்காரர் ஆகவேண்டும் என்பதுதான். 12,000 கோடி ருபாய்க்கும் மேல் ஆண்டுவர்த்தகம் செய்யும் நிறுவனமாக மாற்றிய இவர் தன் அனுபவங்களை நூலாகவும் எழுதி உள்ளார்.

ஹோவார்டின் புகழ்பெற்ற வரிகள் இவை: ”ஏதாவது வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று எப்போதும் விரும்பினேன்.”  அவருடைய நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஊழியர்களை ஆர்வத்துடன் பணி செய்ய வைத்ததே!

பணமொழி

செல்வச் செழிப்பு என்பது அதிகமான விலையுயர்ந்த பொருட்களை வைத்திருப்பது அல்ல; குறைவான விருப்பங்களைக் கொண்டிருப்பதே-

-எபிக்டெடஸ் 

நவம்பர், 2014.