ஓவியம் ஜீவா
சிறுகதைகள்

சுடும் தாமரைகள்!

ராஜேஷ்குமார்

கற்பகவல்லி அடுத்த வார ‘மங்கையர் மகிமை' இதழுக்கான தலையங்கம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்த போது மேஜையின் மேல் இருந்த இண்டர்காம் முணு முணுத்தது. எழுதுவதை நிறுத்தாமல் ரிஸிவரை Gkzx காதுக்கு ஒற்றி ‘‘சொல்லு.. சைலஜா'' என்றார்.

‘‘மேடம் உங்களை பார்த்து பேச கீர்த்தி வாசன் என்கிற இளைஞனும்  ஹாசினி என்கிற ஒரு பெண்ணும் வந்து இருக்காங்க...''

‘‘என்ன விஷயம்னு கேட்டியா..?''

‘‘கேட்டேன் மேடம்... ஒரு பத்து நிமிஷம் பேசனும்னு

சொன்னாங்க,

‘‘நீ என்ன சொன்ன?''

‘‘அடுத்த இஷ்யு முடிக்கிற வேலையில் மேடம் பிஸியாய் இருக்காங்க... நீங்க இன்னொரு நாளைக்கு போன் பண்ணி பேசி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வாங்கன்னு

சொன்னேன், ஆனா அவங்க பெங்களுரிலிருந்து வர்றதாகவும், நம்ம மங்கையர் மகிமை புத்தகத்தை தவறாமல் படிக்கக்கூடிய வாசகர்கள்னும், உங்களை பார்த்து பேச ஆசைப்படறதாகவும் சொன்னாங்க...''

‘‘அவங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ஃபா..?''

‘‘அப்படி தெரியல மேடம், அந்த பெண்ணோட கையில் போன வாரம் மங்கையர் மகிமை புக் இருக்கு...!''

‘‘நீ சொல்றதை பார்த்தா அவங்க ரீடர்ஸாய்தான் இருக்கனும், ரெண்டு பேரையும் என்னோட ரூமுக்கு அனுப்பி வை... பத்து நிமிசத்துக்கு மேல பேசக்கூடாதுன்னு சொல்லிடு''

‘‘எஸ். மேடம்.''

கறபகவல்லி இண்டர்காம் ரிஸிவரை அதனிடத்தில் பொருத்திவிட்டு எழுதிக்கொண்டிருந்த தலையங்கத்தை மேஜையின் ஓரமாய் தள்ளி வைத்தாள். மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து ஒரு வாய் தண்ணீரை தொண்டைக்கு வார்த்துக் கொண்டு காத்திருக்க, கதவைத் தயக்கமாய் திறந்து கொண்டு அந்த உயரமான இளைஞனும், அந்த அழகான பெண்ணும் உள்ளே வந்தார்கள்.

‘‘வணக்கம் மேடம்...''

‘‘வணக்கம்  உட்கார்ங்க...!'' கற்பகவல்லி தான் அணிந்திருந்த ஸ்பெக்ஸை கழற்றி மேஜையின் மீது வைத்துவிட்டு தனக்கு எதிரே இருந்த நாற்காலிகளை காட்டினாள்.

இருவரும் உட்கார்ந்தார்கள்.

‘‘ஸாரி மேடம்... நீங்க பிஸியாய் இருக்கும் போது வந்து தொந்தரவு தர்றோம்.''

கற்பகவல்லி மென்மையாய் புன்னைகை பூத்தாள்.

‘‘அதெல்லாம் ஒன்னுமில்லை...உங்களைப்பத்தி சொல்லுங்க, பெங்களுரிலிருந்து வரீங்க போலிருக்கு.''

அந்த இளைஞன் சொன்னான். ‘‘ஆமாம் மேடம் என்னோட பேரு கீர்த்தி வாசன், லாயராய் ப்ராக்டிஸ் பன்றேன். இவங்க

ஹாசினி, என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்.

ஒலிச்சாரல் எஃப்.எம்.மில் ரேடியோ ஜாக்கியாய் இருக்காங்க...''

‘‘ஓ...நைஸ்... ரெண்டு பேரும் வெவ்வேறு துறைகளில் இருந்தாலும் ஃப்ரண்ட்ஸாய் இருக்கீங்க... அது எப்படி...?''

ஹாசினி சிரித்தாள்.

‘‘சரி சொல்லுங்க என்னை பார்த்து பேச வந்ததற்கு ஏதாவது காரணம் இருக்கா...?''

‘‘இருக்கு மேடம்...!'' என்றாள் ஹாசினி

‘‘என்ன?''

‘‘மேடம்.... கடந்த ரெண்டு வார காலமாய் உங்கள் மங்கையர் மகிமை இதழ்களில் ‘‘சூரியனை சுடும் தாமரைகள்''என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிட்டு வரீங்க... ரியலி தட்ஸ் சூப்பர்ப்...அதுவும் இப்போ நெருப்பு மாதிரி தகிச்சுட்டு இருக்கிற ‘மீ....டூ' விஷயத்தை அடிப்படையாய் வச்சு ஒரு புதிய கோணத்துல உங்க கருத்துக்களை சொல்லிட்டு வரீங்க....அந்த கருத்துக்களை நானும் கீர்த்திவாசனும் ஷேர் பண்ணிக்கிட்டோம். இருந்தாலும் இது பெரிய அளவில் ரீச் ஆகணும்னு விரும்புகிறோம்.''

கற்பகவல்லி  மென்மையாக சிரித்தார்.

‘‘இப்பவும் நல்ல ரீச்சில் தான்  இருக்கு. இந்த ‘மங்கையர் மகிமை' வார இதழ் ரெண்டரை லட்சம்

சர்குலேசன்''

‘‘அது தெரியும் மேடம், இன்னிக்கு தமிழ்நாட்டில் இருக்கிற பெண்கள் சம்பந்தபட்ட பத்திரிக்கைகளில் உங்க பத்திரிகைக்கு தான் முதலிடம், இருந்தாலும் இன்னொரு லெவலுக்கு இந்த மீ..டூ குறித்த உங்களுடைய அதிரடியான கருத்துக்கள் போய்ச்

சேரணும்,''

கற்பகவல்லி சிரித்து நாற்காலிக்கு சாய்ந்தபடியே கேட்டாள்.

‘‘சரி என்ன பண்ணலாம்னு நீயே சொல்லம்மா...?''

‘‘எங்க ஒலிச்சாரல் எஃப்.எம்- க்கு ஒரு பேட்டி தரணும்''

‘‘என்னது பேட்டியா..''

‘‘சாரி மேடம்.... உங்களுக்கு பேட்டி தர்றது பிடிக்காதுன்னு எங்களுக்கு தெரியும். அதனால் தான் கீழே இருக்கிற ரிசப்சனிஷ்ட் கிட்டே  விஷயத்தை சொல்லல...மாட்டேன்னு சொல்லிடாதீங்க மேடம். ஒரு நாலஞ்சு கேள்விதான்.... அந்த கேள்விக்கு நீங்க உங்க பாணியில் பதில் சொன்னாப் போதும்...''

கற்பகவல்லி சலித்து கொண்டாள், ‘‘என்னம்மா நீ இந்த வார இஷ்யூவை முடிக்க வேண்டிய அவசரத்துல இருக்கேன். நீ பேட்டி எடுக்குறேன்னு உள்ளே வந்து உக்கார்ந்துட்ட''

‘‘எக்ஸ்ட்ரீம்லி ஸாரி மேடம்.... இது ஒரு ஷார்ட் அண்ட் ஷார்ப் பேட்டி. அஞ்சே அஞ்சு கேள்விகள் தான்...ப்ளீஸ் மேடம்.''

ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்து உட்கார்ந்தாள் கற்பகவல்லி ‘‘பத்து நிமிசத்துக்குள்ள பேட்டி முடியணும்...''

‘‘தேங்க்யூ மேடம்...'' என்று சொன்ன ஹாசினி தன்னுடைய கைப்பையைத் திறந்து அந்த நவீன ஆண்ட்ராய்டு செல்போனை எடுத்து ஆடியோ பதிவை ஆன் செய்து விட்டு பேட்டியை ஆரம்பித்தாள்.

‘‘என்னோட முதல் கேள்வி இது தான் மேடம். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு  நடந்த பாலியல் சீண்டல் கொடுமைகளை அப்போழுதே சொல்லாமல் சில வருடங்கள் கழித்து இப்போது சொல்கிறார்கள் இது சரியா...''

‘‘சரிதான்....! ஏனென்றால் பாலியல் தொந்தரவு கொடுத்த எல்லோருமே செலிபரிட்டீஸ்தான். அதாவது முக்கியமான புள்ளிகள். அதில் பெரும்பாலும் அரசியல்வாதிகள்,

சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள். உங்களுக்கே தெரியும், சினிமா, அரசியல் இரண்டுமே சாக்கடைகள் என்பதை அந்த துறையினரே அந்த உண்மையை ஒப்புக்கொள்வார்கள்.அதே நேரத்தில் இவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு யாருக்கும் இருக்காது. இவர்களிடம் இருக்கும் பணம் பேசுவதால் சட்டம், நீதி, நியாயம் நேர்மை, எல்லாம் ஊமையாகிவிடும், பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண்கள் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் சென்றால் அந்த புகாரை வாங்க கூட மாட்டார்கள். என்பது அந்த பெண்களுக்கே தெரிந்த காரணத்தால். அப்போது அவர்கள் அதைபற்றி பேசவில்லை.''

‘‘இப்போது பேச என்ன காரணம்.''

‘‘அறிவியல் சுனாமி.''

‘‘நீங்க என்ன சொல்ல வரீங்கனு எனக்கு புரியல மேடம்.''

‘‘சில வருஷங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டை

சுனாமி தாக்கியதும், பெரும் அழிவை ஏற்படுத்தியதும் உனக்குத்தெரியும்னு நினைக்கிறேன்.''

‘‘தெரியும் மேடம்,''

‘‘அதுக்கு முன்னாடி எப்பாவது சுனாமி வந்துருக்கா''

‘‘இல்லை,,,,''          

‘‘சுனாமி என்ற வார்த்தையாவது  நமக்கு பரிச்சயம் உண்டா...''

‘‘இல்லை...''

‘‘அது மாதிரி தான் இது ஒரு அறிவியல் சுனாமி, இன்னிக்கு படிக்கிற பெண்கள் அதிகம், எந்த ஒரு ஐ.டி.கம்பெனியை எடுத்துகிட்டாலும் அங்கே வேலை செய்பவர்களில் பாதி பேர் பெண்கள்.ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கபட்டால் அதை தட்டி கேட்க பல மாதர் சங்க அமைப்புகள். மங்கையர் மகிமை போன்ற பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் பத்திரிக்கைகள். தங்களை சுற்றி இவ்வளவு பெரிய பாதுகாப்பு வளையம் இருக்கிற காரணத்தால்தான் பல வருஷங்களுக்கு முன் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை, கொடுமைகளை தைரியமாக சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இப்படி சொல்வதின் மூலமாக தான் மோசமாக விமர்சிக்கப்பட்டாலும் பரவாயில்லை... சீண்டியவன் தண்டிக்கப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் விரும்புகிறார்.''

ஹாசினி சில நிமிடம் மவுனமாய் இருந்து விட்டு பேசினால். ‘‘மேடம்..! நான் இப்ப கேட்க போற கேள்வியை கேட்டு நீங்க டென்சன் ஆக கூடாது...''

‘‘பேட்டின்னு வந்தாச்சு... அப்புறம் என்ன கேளும்மா...''

‘‘அது வந்து மேடம்...''

‘‘என்ன தயக்கம்... நீ எந்த கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்ல தயாராய் இருக்கிறேன்...''

‘‘உங்க வீட்டு ஆண்கள் மேல இப்படிபட்ட ஒரு மீ...டூ குற்றச்சாட்டு வந்தா உங்களுடைய 

நடவடிக்கைகள் எது மாதிரியானதாக இருக்கும்...?''

இது வரைக்கும் கற்பகவல்லியின் முகத்தில் இருந்த சிரிப்பு சட்டென்று காணாமல்  போயிற்று...

‘‘பார்த்திங்களா மேடம்...டென்சனாயிட்டீங்க...''

‘‘நோ...நோ... இது டென்சன் கிடையாது. பட் இது மாதிரியான ஒரு கேள்வியை உன்கிட்டயிருந்து நான் எதிர்பார்க்கல...''

‘‘இந்த கேள்விக்கு உங்க பதில் என்ன மேடம்...''

கற்பகவல்லி சில விநாடிகள் யோசனையாய் இருந்து விட்டு சொன்னாள்.

‘‘என்னோட கணவர்  அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இறந்துவிட்டார். இப்போ வீட்ல நானும் என்னோட மகன் திவாகரும் மட்டும்தான் இருக்கோம். திவாகர் இப்போ பெங்களூரில் ஒரு ஐடி,கம்பெனியில் ஸாஃப்ட் வேர் சீஃப் ப்ரோக்ராமராய் வேலை பார்த்திட்டு இருக்கான். சனி ஞாயிறு சென்னை வருவான் ரெண்டு நாள் இருந்துட்டு போவான்.''

ஓவியம்

‘‘திவாகர்க்கு கல்யாணம் ஆயிடுச்சா மேடம்...?''

‘‘இல்லை பெண் பார்த்துட்டு இருக்கேன்.''

‘‘பார்க்காதிங்க மேடம்...''

கற்பகவல்லி அதிர்ச்சியோடு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

‘‘நீ என்ன சொல்ற....''

அதுவரை எதுவும் பேசாமல் இருந்த கீர்த்திவாசன் தன் சர்ட் பாக்கெட்டில் வைத்து இருந்த ஒரு போட்டோவை Gkzx கற்பகவல்லியிடம்

நீட்டினான்.

‘‘இந்த போட்டோவை கொஞ்சம் பாருங்க மேடம்...''

போட்டோவை வாங்கிப் பார்த்தாள் கற்பகவல்லி. ஓர் அழகான இளம்பெண் காமிராவை பார்த்து சோகமாய் சிரித்து வைத்திருந்தாள்.

 ‘‘யார் இந்த பொண்ணு...''

‘‘பேரு நர்மதா... உங்க சன் திவாகரால் பாலியல் சீண்டலுக்கும், பலாத்காரத்துக்கும் ஆளான பெண்.இந்த பெண்ணுக்கு அம்மா, அப்பா கிடையாது, இரு அண்ணன் மட்டும் இருந்தான். அவனும் கல்யாணம் ஆனது ஒய்ஃபோடு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆயிட்டான். இப்போ இந்த பெண் பெங்களூர் மடிவாடா பெண்கள் விடுதியில் ஒரு ஐ.டிகம்பெனிக்கு வேலைக்கு போயிட்டு வர்றா..  ரெண்டு வருசத்துக்கு முன்னாடி உங்க சன் திவாகர் இந்தப்பெண்ணை ஒரு ரிசார்ட்டுக்கு Tmimk போய் மிரட்டி, பாலியல் பலாத்காரம் பண்ணி...''

‘‘நோ...'' கற்பகவல்லியின் முகம் முழுக்க கோப ரத்தம் பரவியிருக்க கத்தினாள்.

‘‘என்னோட சன் அப்படிபட்டவன் இல்லை...''

‘‘எல்லா அம்மாக்களுக்கும் அவங்கவங்க பையன் தங்கக் கம்பிதான், நீங்கமட்டும் விதி விலக்கா என்ன...? இதோ பாருங்க மேடம்... நர்மதா என்னோட ஃப்ரண்ட். இந்த மீ...டூ... அமைப்பு இப்போ ஒரு அக்னி ஜுவாலையாக மாறியிருக்கிறதால் இதை மீடியாக்களுக்கு தெரியப்படுத்தபோறோம், அதுக்கு முன்னாடி உங்ககிட்ட முறைப்படி சொல்லிட்டு போகத்தான் வந்தோம். உங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் யோசிச்சு முடுவு எடுங்க.ஒரு பிரபலமான பெண் பத்திரிக்கை ஆசிரியராய் இருக்கிற நீங்க நர்மதாவை உங்க மருமகளாய் ஏத்துக்கப் போறீங்களா இல்லை. ஒதுக்க போறிங்களா... உங்க சன் கிட்ட கலந்து

பேசிட்டு பதில் சொல்லுங்க நீங்க சொல்ற பதிலைப் பொறுத்துதான் எங்களோட நடவடிக்கைகள் இருக்கும்.''

ஹாசினியும் கீர்த்திவாசனும் எழுந்து கொண்டார்கள்.

இரண்டு நாட்களுக்கு பிறகு வந்த சனிக்கிழமை இரவு டி.வி. பார்த்துக்கொண்டு இருந்த திவாகருக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் கற்பகவல்லி. கையில் வைத்திருந்த போட்டோவை காட்டி கேட்டாள்.

‘‘இந்த பெண்ணை உனக்கு தெரியுமாடா..''

ஒரு சினிமா ஹீரோ போல் தோற்றம் காட்டிய திவாகர் அந்த போட்டோவை பார்த்துவிட்டு அதிர்ந்து போனவனாய் நிமிர்ந்தான்.

‘‘அ..அ... அம்மா ! இந்த போட்டோ உன்னோட கைக்கு எப்படி...''

‘‘உன்னோட முகத்துல தெரியிற அதிர்ச்சியே இந்தப் பெண்ணை உனக்கு தெரியும்னு காட்டி கொடுக்குது, இவ பேர் நர்மதா சரியா...?''

‘‘...ம்...''

‘‘இவளோடு உனக்கு பழக்கம் இருக்கா...?''

‘‘ம். ஒரு ஃப்ரண்ட் மாதிரி...''

‘‘அவ்வளவுதானா..''

‘‘ஆமாம்மா..''

‘‘இதோ பார்றா...என்கிட்ட எதையும் மறைக்காதே,,,, ரெண்டு நாளைக்கு முன்னாடி ஹாசினி, கீர்த்திவாசன்னு ரெண்டு பேர் என்னைப்பார்க்க வந்தாங்க, அந்த ரெண்டு பேரும் மீ...டூ... இயக்கத்தைச் சேர்ந்தவங்க. நர்மதா சார்பாய் வந்திருக்காங்க. அவங்க சொல்ற குற்றச்சாட்டு என்ன் தெரியுமா''

‘‘என்ன...''

‘‘நீ அந்த பெண்ணை ஒரு ரிசார்ட்டுக்கு கூட்டிப்போய் நாசம் பண்ணியிருக்க...''

‘‘சும்மா...அது வந்து...''

‘‘இதோ பார்... இந்த பூசி மொழுகுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்....நீ உண்மையை மூடி மறைச்ச இந்த விஷயம் மீ...டூ இயக்கம் மூலமா எல்லா மீடியாக்களுக்கும் போய் சந்தி சிரிச்சிடும். இதுல பாதிக்கபோறது நீயோ...நானோ.. மட்டுமில்லை... 'மங்கையர்  மகிமை' என்கிற மிகப்பெரிய நிறுவனம்...''

‘‘அ...அம்மா''

‘‘உண்மையை சொல்லு...''

‘‘அம்மா...! அந்த நர்மதாவை ஏதோ ஒரு வேகத்துல காதலிச்சுட்டேன், நெருக்கமாகவும் இருந்துட்டேன். அப்புறம் ஒருநாள் என் ஃப்ரண்ட் ஒருத்தன் அவ உன்னோட ஸ்டேட்டஸுக்கு ஏத்தவயில்லன்னு

சொன்னதும் விலக ஆரம்பிச்சுட்டேன்.

‘‘இதோ பார் திவாகர்... பெண்களை காதலிச்சு ஏமாத்துற காலமெல்லாம் போன தலைமுறையோடு முடிஞ்சு போச்சு. இந்த தலைமுறை அப்படியில்லை. சிறுமிகளை பாலியல் பலாத்காரம் பண்ணினால் மரணதண்டனை. பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆண் ஒரு பெண்கிட்ட தப்பா நடந்திருந்தாலும் அதை வெளிச்சம் போட்டு காட்ட,மீ...டூ.. இயக்கம் முளை விட்டாச்சு...!''

திவாகர் பெரு மூச்சு விட்டான்.

‘‘இப்ப நான் என்னம்மா பண்ணனும் ?''

‘‘ஸ்டேட்டஸ் எல்லாம் பார்க்காம நர்மதாவை கல்யாணம் பண்ணிக்க... அந்த பொண்ணுதான் நம்ம வீட்டு மருமக...''

‘‘அம்மா...நீ ரொம்ப பயப்படுறே...அந்த ஹாசினி, கீர்த்தி வாசன்கிட்ட நான் பேசுறேன்....!''

‘‘நீ யார்கிட்டயேயும் பேச வேண்டாம்... நர்மதாவை பிடிச்சதினால் தான் லவ் பண்ணியிருக்க...எனக்கும் நர்மதாவை பிடிச்சிருக்கு, நர்மதாகிட்ட நான் பேசணும்... அவளோட போன்நெம்பரை குடு...!

‘‘அம்மா... அவசரப்படாதே...

டேய்... மொதெல்ல நெம்பரைக் குட்றா....!

பெங்களுர்.

இரவு பதினோரு மணி...

‘‘இனி தூங்கலாம் ' என்று எண்ணி படுக்கையில்

சாய்ந்த விநாடி ஹாசினியின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு காதுக்கு ஒற்றினார்... ‘‘சொல்லு திவாகர்...''

‘‘நர்மதாவை நான் கல்யாணம் பண்ணிக்க என்னோட அம்மா பச்சைக்கொடி காட்டிட்டாங்க...!''

‘‘நிஜம்மாவா...?''

‘‘ஆமா...நர்மதாவோட செல்போன் நெம்பரை வாங்கி அம்மா அவகிட்டேயும்  பேசியாச்சு...

‘‘க்ரேட்...!''

‘‘உனக்கும், லாயர் கீர்த்திவாசனுக்கும் ஒரு பிக்

சல்யூட்''

‘‘உன்னோட சல்யூட்டை எங்களூக்கு வைக்காதே..

‘‘பின்ன யாருக்கு...''

‘‘...மீ....டூ...வுக்கு வை.''

நவம்பர், 2018.