1. கோழி இறைச்சி - 500கிராம்
2. பசலைக்கீரை - ஒரு கட்டு
3. வெங்காயம் - 1லீ கப்
4. தக்காளி - 2 கப்
5. பச்சை மிளகாய் - 1 (அ) 2
6. இஞ்சி - 10 கி
7. பூண்டு - 10 கி
8. கொத்தமல்லிதூள் - 1 லீ தேக்கரண்டி
9. மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
11. சீரகத்தூள் - ஒரு சிட்டிகை
12. கரம் மசாலா தூள் - லீ தேக்கரண்டி
13. கொத்தமல்லித் தழை - 1 தேக்கரண்டி
14. இலவங்கப்பட்டை, கிராம்பு - ஒவ்வொன்று
15. ஏலக்காய், பிரியாணி இலை - ஒவ்வொன்று
16. எண்ணெய் - 2 தேக்கரண்டி
17. உப்பு - தேவையானளவு
கோழி இறைச்சியைச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பசலைக்கீரையை நன்கு சுத்தம் செய்து, தண்ணீரில் உப்பை சேர்த்து வேக வைக்கவும். கீரை வேகும்போது மூடி வைக்க கூடாது. நீர் வற்றும் வரை வேகவைத்து, கீரையை குளிர்ந்த நீரில் சேர்த்து கலக்கவும், இது கீரையின் பச்சை வண்ணத்தை தக்க வைக்கும். பின்பு கீரையை அரைத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய் மற்றும் சீரகத்தை அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி மிதமான சூட்டில் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். இதனுடன் இஞ்சி கலவையை சேர்த்து வதக்கவும். கொத்தமல்லிதூள், மிளகாய் தூள், மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். கோழிக்கறியையும், உப்பையும் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும். பின்பு பசலைக்கீரையை சேர்த்து கடாயை மூடாமல் இரண்டு நிமிடம் வேக வைக்கவும். சூடான ரொட்டி அல்லது அரிசி சாதத்துடன் பரிமாறலாம்.
செப்டெம்பர், 2015.