நடிகர் சங்கத்திலிருந்து கழிவுநீர் போன்ற கெட்டவர்களை வெளியேற்றி உள்ளோம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ரத்னம் படத்தின் விளம்பரத்துக்காக சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், “கார்த்தியின் உழைப்பினால் இன்று நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணி தொடங்கியுள்ளதாகவும், இனி யாராலும் அதை தடுக்க முடியாது” என்று கூறிய விஷால்,”நடிகர் சங்கத்திலிருந்து கழிநீர் போன்ற கெட்டவர்களை வெளியேற்றி, நல்லவர்களை மட்டும் உள்ளே வைத்திருக்கிறோம்.” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
தொடர்ந்து பேசியவர், ”தேர்தலில் வாக்களிக்க விஜயைப் பார்த்து சைக்கிளில் செல்லவில்லை. வாக்குச்சாவடிக்கு செல்ல வண்டி இல்லை என்பதால் சைக்கிளில் சென்றேன். போக்குவரத்து நெரிசலில் வண்டியில் செல்வது சிரமம். நடிகர் விஜய் எனக்கு இன்ஸ்பிரேஷன் தான்” என்று விஷால் பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஷால் கூறியதாவது:
”2026இல் அரசியலுக்கு வருவதாக சொல்லியிருக்கிறேன். என்னை அரசியலுக்கு என்னை வர விடாதீர்கள். நீங்கள் நல்லது செய்தால், நாங்கள் நடித்துக் கொண்டிருப்போம்.
கிராமம் கிராமம் சென்று பாருங்கள் எவ்வளவு குறை இருக்கிறது என்று. இவ்வளவு கட்சிகள், தலைவர்கள் இருந்தும் குறைகள் உள்ளன.
எந்த கட்சியா இருந்தாலும், அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒரே விஷயம் அடிப்படை வசதிதான். மக்கள் வேறு எதுவும் கேட்கவில்லை.
தமிழகத்தில் மாற்றம் நிச்சயம் தேவைப்படுகிறது. தேவைப்படுவதால்தான் நிறையத் தலைவர்கள் உள்ளனர்.