லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் கைகளைப்பிடித்து முத்தமிட்டம் மிஷ்கின் 
சினிமா

“விஜய் நான் கண்ணால் பார்த்த லெஜண்ட்” – மிஷ்கின் புகழாரம்!

Staff Writer

“வாழ்க்கையில் நான் புரூஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் ஆகிய இரண்டு லெஜண்டுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் கண்களால் பார்த்த ஒரே லெஜண்ட் விஜய்தான்.” என்று மிஷ்கின் பேசியுள்ளார்.

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மிஷ்கின் பேசியதாவது:

“ஒருமாதத்துக்கு முன்பு விமானநிலையம் சென்றிருந்தேன். அங்கு கழிவறைக்குச் சென்றபோது, பக்கத்தில் வந்த ஒருவன் லியோ அப்டேட் கேட்டான். கடந்த வாரம் ஸ்வீடன் சென்றேன். அங்கே ஒருவர் விஜய் என்ன சொன்னாரு என்று கேட்டார்.

வாழ்க்கையில் நான் புரூஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் ஆகிய இரண்டு லெஜண்டுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் நான் கண்ணால் பார்த்த லெஜண்ட். அவர் வாழ்க்கையில் உச்சம் தொட்டுவிட்டார். அவருடன் படம் பண்ண வேண்டும் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை. கடுமையான உழைப்பு, அவரைப் போல ஒருவரைப் பார்க்க முடியாது. நான் இந்த நிகழ்ச்சிக்கு 4 மணிக்கு வந்தேன். விஜய் 2 மணிக்கு வந்திருக்கார். ஒரு மனிதனின் உயரம் அவனுடைய உழைப்பால் இருக்கிறது. உழைப்பால் உயர்ந்த மகா கலைஞன் விஜய்.

சில நாட்களுக்கு முன்பு நான் விஜய் பற்றி தவறாக பேசியதால் இறந்துவிட்டேன் என ஒரு போஸ்டர் பார்த்தேன். இதை விஜய் ரசிகர்கள் செய்திருக்க மாட்டார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். காரணம், விஜய் உடன் இருந்தால் வாழத்தான் முடியும். எப்படி சாக முடியும்?. விஜய் 100 வருடம் வாழ வேண்டுவேன். விஜய் சினிமாவிலும் நிஜத்திலும் ஹிரோ. 25 வருடமாக எப்படி ஒரு மனிதர் இப்படி காந்தமாக ஈர்க்க முடியும்? இந்த மேடையில் இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விஜய்யின் ஒவ்வொரு துளி உயரமும் அன்பு, உழைப்பு, நேசம், பாசம், பண்பு. இந்த மேடையில் இருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்” என்றார்.

மிஷ்கின் விஜய்யின் கைகளைப் பிடித்து வணங்கிய காட்சி சமூக ஊடகத்தில் வைரலாகி உள்ளது.