விஜய் ஆண்டனி 
சினிமா

"அவளுடன் நானும் இறந்துவிட்டேன்:" மகளின் இறப்பு குறித்து விஜய் ஆண்டனி உருக்கம்!

Staff Writer

தன் மகள் இறப்பு குறித்து நடிகர் விஜய் ஆண்டனி உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அது சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனிக்கு இரண்டு மகள்கள். இதில், மூத்த மகளான மீரா கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தன் மகள் மீரா மறைவு குறித்து விஜய் ஆண்டனி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த சாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஓர் அமைதியான இடத்துக்குத்தான் சென்றிருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள். உங்கள் விஜய் ஆண்டனி” என்று பதிவிட்டுள்ளார்.