இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, ஆளுநர் ஆர்.என் ரவி கையால் இன்று டாக்டர் பட்டம் பெற்றார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரித்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், இசை தொடர்பான ஆய்வில் பிஎச்டி முடித்த ஹிப்ஹாப் ஆதி, ஆளுநரின் கையால் டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
’சுதந்திரமான இசை கலைஞர்களுக்கான தொழில் முனைவு வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் ஐந்து ஆண்டுகள் ஹிப்ஹாப் ஆதி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
ஆளுநர் கையால் டாக்டர் பட்டம் பெற்றது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆதி, ”முனைவர் பட்ட ஆய்வு செய்தால் ஆளுநரிடம் தானே பட்டம் பெற வேண்டும்.” என்றார்.