சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்: எளிமையாக முடிந்த படத்தின் பூஜை!

Staff Writer

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே23 படத்தின் பூஜை நேற்று சென்னையில் எளிமையாக நடந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 21ஆவது திரைப்படம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக எஸ்கே 23 என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் நாயகியாக ருக்மணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.