சாலார் திரைப்படம் 
சினிமா

மூன்றாவது நாள் சாலார் வசூல்; அறிவித்த படக்குழு!

Staff Writer

சாலார் திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.402 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான சாலார் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் இரண்டாவது, மூன்றாவது நாள் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சலார் திரைப்படம் 2ஆவது நாளில் ரூ.295.7 கோடியும் 3ஆவது நாளில் ரூ. 402 கோடி வரை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது.

படம் வெளியான முதல் நாள் ரூ.178.7 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே இதுதான் முதலிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.