சினிமா

ரஜினிகாந்த் 170: இணைந்தார் துஷாரா விஜயன்!

Staff Writer

த.செ.ஞானவேல் இயக்கும் ரஜினிகாந்தின் 170ஆவது படத்தில் துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதற்கிடையே அவர், ஞானவேல், லோகேஷ் கனகாரஜ் அகியோரின் இயக்கத்தில் தனித்தனியான படங்களில் நடித்துவருகிறார்.

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 170ஆவது படத்துக்கு, கடந்த ஆகஸ்ட்டில் பூஜை போடப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘வேட்டை’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ரஜினி, இஸ்லாமிய காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில் ஆகியோர் நடிக்க உள்ள நிலையில், தற்போது துஷாரா விஜயனும் இணைந்துள்ளார்.

இவர், ஏற்கெனவே சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்க்கன் ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர்.