இயக்குநர் விக்னேஷ் ராஜா 
சினிமா

“விளம்பரம் செய்யாத படம் பத்திரிகை விமர்சனங்களால் ஓடும்” – போர் தொழில் இயக்குநர் நெகிழ்ச்சி

Staff Writer

”விளம்பரம் செய்யாத ஒரு படம், பத்திரிக்கை விமர்சனங்களால், ரசிகர்களால் ஓடும் என்பதற்கு போர் தொழில் சிறந்த உதாரணம்” என அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் நேர்த்தியான திரைக்கதையில், அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு, நிகிலா விமல் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 9ஆம் தேதி வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் இன்றும் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா, '' என்னோட முதல் நன்றி தயாரிப்பாளர்களுக்கு தான். இந்தக்கதையைக் கேட்டு இப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. படம் ஒப்பந்தமானவுடன் ‘நீங்கள் நினைத்ததை.. எழுதியதை...’ எடுங்கள் என்றார்கள்.

அறிமுக இயக்குநருக்கு இது எவ்வளவு பெரிய வரமென்பது உங்களுக்குப் புரியும். இசையில் ஜேக்ஸ் பிஜாய் மிரட்டியிருந்தார். அவர் தான் அடம்பிடித்துப் படத்தின் கடைசியில் பாட்டு வைத்தார். இப்போது அந்த பாட்டில்லாமல் அந்தப்படத்தை நினைக்க முடியவில்லை. ஒலி அமைப்பில் மிரட்டி விட்டார். படம் முழுக்க அதன் உணர்வை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பது இசை தான். அதை மிகச்சிறப்பாக செய்தார்கள். இந்தப்படத்தில் அத்தனை பேரும் கடுமையாக உழைத்துள்ளார்கள்.

படத்தை 2010 இல் நடப்பதாக எடுத்தோம். அதற்கான சிஜி படம் முழுக்க இருக்கிறது. உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் எல்லோருக்கும் நன்றி. ஆல்ஃபிரட்டையும் என்னையும் தனியாக மனதில் பிரித்துப் பார்க்க முடியவில்லை. நாங்கள் இருவருமே ஒரே ஆள் தான். இப்படி ஒரு ரைட்டர் கிடைப்பது வரம். நிகிலா விமல் கதாபாத்திரம் அவர் கதையில் இல்லாத பலத்தை நடிப்பில் கொண்டு வந்தார். அசோக் செல்வன் காலேஜ் படிக்கும் போதிருந்து தெரியும், அப்போதே யாராவது குறும்படம் எடுத்தால் ஓடிப்போய் நடிப்பான். அப்போது அவன் ஏற்படுத்திய நெட்வொர்க் இப்போது எல்லோரும் இயக்குநர்களாக இருக்கிறார்கள். இன்னும் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்துவான். சரத்குமார் சாரை நன்றாக நடிகை வைத்துள்ளேன் என்கிறார்கள். ஆனால் 150 படத்தில் நடித்தவருக்கு என்ன சொல்ல முடியும்? இந்தப்படத்தில் செய்தது எல்லாமே அவரே செயத்தது தான். என்னை விட அவருக்கு தான் படத்தின் மீது நம்பிக்கை இருந்தது." என்றார்.