மெய்யழகன் 
சினிமா

மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Staff Writer

மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27ஆவது படமாகும். இப்படத்துக்கு 'மெய்யழகன்' எனப் பெயரிட்டுள்ளனர். இதன், முதல் பார்வை போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தில், நடிகர் அரவிந்த் சுவாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மெய்யழகன் வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழா கோயமுத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளதாகவும் நடிகர் சூர்யாவும் நிகழ்வில் கலந்துகொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram