அதிதி ஷங்கர் - சிவகார்த்திகேயன் 
சினிமா

சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர் இணைந்து பாடிய பாடல் நாளை மறுநாள் வெளியீடு!

Staff Writer

மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ள ‘வண்ணாரப்பேட்டையில’ பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன். இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். ஜூலை 14ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா ஜூலை 2ஆம் தேதி நடைபெறுகிறது. டான், ப்ரின்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த சாய் ராம் கல்லூரியிலேயே இந்தப் படத்தின் வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ள ‘வண்ணாரப்பேட்டையில’ பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் காதல் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இயக்குநரும், இசையமைப்பாளரும் திட்டம் தீட்டி சிவகார்த்திகேயனையும் அதிதி ஷங்கரையும் பாட வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.