2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநில அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகைக்கான விருதை ஊர்வசி பெற்றுள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் 700க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை ஊர்வசி. தொடக்கத்தில் நாயகியாகவும், தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
55 வயதாகும் ஊர்வசி 2006இல் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் 2 முறை தமிழக அரசின் மாநில விருதையும் வென்றவர்.
கடைசியாக தமிழில் ஜே.பேபி படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் நடிகை பார்வதி உடன் உள்ளொழுக்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தப் படத்தில் நடித்ததற்காக கேரள மாநில அரசின் விருது கிடைத்துள்ளது. இது இவருக்கு 6ஆவது விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1989, 1991ஆம் ஆண்டு தொடர்சியாக 3 முறை விருது வென்றிருந்தார். தற்போது, நடிப்புக்காக மலையாளத்தில் அதிகம் முறை மாநில விருதுகளை வென்றவர் (பெண்கள் பிரிவில்) என்ற சாதனையை ஊர்வசி படைத்துள்ளார்.
அதேபோல், ஆடுஜீவிதம் படத்தில் நடித்ததற்காக சிந்த நடிகருக்கான விருதை பிருத்விராஜ் பெற்றுள்ளார். சிறந்த படமாக ‘காதல் தி கோர்’ என்ற படமும், சிறந்த இயக்குநர் விருதை ஆடுஜீவிதம் படத்துக்காக பிளெஸ்ஸியும் பெற்றுள்ளனர்.