கமல்ஹாசன் 234ஆவது படத்தின் பெயர் அறிவிப்பு 
சினிமா

கமல்ஹாசன் 234ஆவது படத்தின் பெயர் அறிவிப்பு!

Staff Writer

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கு ‘தக் லைஃப்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987இல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் அறிமுக முன்னோட்ட வீடியோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த விடியோவை கமலின் பிறந்த நாளான வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில், கமல்ஹான் நடிக்கும் 234ஆவது படத்தின் பெயர் ‘தக் லைஃப்’ என்று போஸ்டர் வெளியிட்டுள்ளது ராஜ் கமல் பிலிம்ஸ்.

இதைத் தொடர்ந்து, இப்படத்தின் அறிவிப்பு விடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தக் லைஃப் என்ற பெயர் சமூக ஊடகத்தில் அனைவராலும் பயன்படுத்தப்படும் பெயராகும்.