ஜெயிலர் படத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சீருடையை காட்டக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் இதுவரை ரூ. 525 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தின் இடைவேளை காட்சியில் ரஜினி தனது மருமகளை கிண்டல் செய்த ஒருவரை கழுத்தினை அறுக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். இதில் அந்த நபர் ஆர்சிபி அணியின் ஜெர்ஸியை அணிந்திருப்பார். ஆர்சிபி அணியின் ஜெர்ஸி தவறான நபருக்கு அணிவிக்கப்பட்டது குறித்து ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றத்தை நாடியது ஆர்சிபி விளம்பரக் குழு.
இதனை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம், ஜெயிலர் படத்தில் ஆர்சிபி அணியின் ஜெர்ஸி பயன்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர்-1ஆம் தேதிக்குள் இந்த காட்சியில் வரும் ஆர்சிபி ஜெர்ஸி நீக்கப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டுமென படக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓடிடி, தொலைக்காட்சிகளிலும் மாற்றப்பட்ட காட்சிகளே ஒளிபரப்ப வேண்டும்” எனக் கூறியுள்ளது.
படக்குழுவும் இந்த மாற்றத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.