நடிகர் விஜய் 
சினிமா

வருமான வரி… பாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய கோட் விஜய்!

Staff Writer

கடந்த நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களில் பாலிவுட் நடிகா் ஷாருக்கான் ரூ.92 கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் உள்ளார்.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டுக்கான அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியலை ‘ஃபாா்ச்சூன்’ இதழ் வெளியிட்டது.

அதில், முதலிடத்தில் உள்ள ஷாருக்கான ரூ.92 கோடியும், விஜய் ரூ.80 கோடியும் சல்மான் கான் ரூ.75 கோடியும், அமிதாப் பச்சன் ரூ.71 கோடியும், கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரூ.66 கோடியும் வருமான வரி செலுத்தியுள்ளனர்.

தென்னிந்திய நடிகா்கள் மோகன்லால், அல்லு அா்ஜுன் ஆகிய இருவரும் தலா ரூ.14 கோடி வரி செலுத்தியுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ரூ.38 கோடி வருமான வரி செலுத்தி ஒட்டுமொத்த பட்டியலில் 7-ஆவது இடத்திலும் கிரிக்கெட் வீரர்களிடையே 2-ஆவது இடத்திலும் உள்ளார்.

சச்சின் டெண்டுல்கா், சௌரவ் கங்குலி ஆகியோா் முறையே ரூ.28 கோடி, ரூ.23 கோடி வரி செலுத்தி பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஹா்திக் பாண்டியா ரூ.13 கோடியும், ரிஷப் பந்த் ரூ.10 கோடியும் வரி செலுத்தியுள்ளனர்.