லியோ படத்தின் இந்தி போஸ்டர்  
சினிமா

'லியோ' படத்தின் இந்தி போஸ்டர் வெளியானது!

Staff Writer

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் இந்தி போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்த நாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், படம் வெளியாகும் வரை லியோ அப்டேட் இருக்குமென விருது விழா ஒன்றில் லோகேஷ் கூறினார். அதன்படி ஞாயிற்றுக்கிழமை லியோ தெலுங்கு போஸ்டரும், திங்கள் கிழமை கன்னட போஸ்டரும் நேற்று தமிழ்ப் போஸ்டரும் வெளியானது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் இந்தி போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.