முதலமைச்சர் சந்தித்து நன்றி தெரிவிக்கும் வசந்த பாலன் 
சினிமா

முதல்வருக்கு வசந்தபாலன் கொடுத்த அந்த புத்தகம்!

Staff Writer

உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் போன்ற வித்தியாசமான திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். சமீபத்தில், அவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அநீதி.

உணவு டெலிவரி செய்யும் நாயகனின் வாழ்க்கைப் போராட்டத்தை பற்றி படம் யதார்த்தமாகப் பேசியதால் பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல், சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு அத்திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.

இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையில், ‘ஓலா, ஸ்விக்கி ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கத் தனி நலவாரியம் அமைக்கப்படும்’ என தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு,இயக்குநர் வசந்த பாலன் இன்று நன்றி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சென்று சந்தித்த இயக்குநர் வசந்த பாலன், அலெக்ஸ் ஹேலி எழுதிய வேர்கள் நாவலை வழங்கினார்.