சுப்ரமணியபுரம் படத்தின் புதிய போஸ்டர் 
சினிமா செய்திகள்

சுப்ரமணியபுரம் படத்தின் மறுவெளியீட்டிற்கான டிரைலர் வெளியீடு!

Staff Writer

சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் வெளியாகி 15ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிலையில், அப்படத்தின் புதிய டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி வெளியான சுப்ரமணியபுரம் படத்தை சசிகுமார் இயக்கி நடித்தார். அதில் நடிகர் ஜெய், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்தார். சசிகுமார், ஜேம்ஸ் வசந்தன், சுவாதி ஆகியோருக்கு இது முதல் படமாகும்.

படத்தின் கதைக்களம், நடிகர்கள் தேர்வு, அவர்களின் காஸ்ட்யூம், பாடல், நகைச்சுவை போன்ற பல விஷயங்களுக்காக படம் பேசப்பட்டது.படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால், மதுர குலுங்க, ஆடுங்கடா, காதல் சிலுவை உள்ளிட்ட பாடல்களை இன்றுவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில், சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி இப்படம் சில திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. படத்தின் மறுவெளியீட்டுக்கான டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.