சலார் திரைப்பத்தில் பிரபாஸ் 
சினிமா செய்திகள்

சலார் திரைப்படத்தின் டீசர் எப்படி உள்ளது?

Staff Writer

‘கேஜிஎஃப்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் டீசர் வெளியானது. இந்தப் படத்தின் டீசர் கேஜிஎஃப் படத்தைப் போல் இருப்பதாக பேசப்படுகிறது.

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

சாலார் தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாகவுள்ளது. வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியானது. இப்படம் ’கேஜிஎஃப்’ திரைப்படத்தை போன்றே காட்சி அமைப்புகள், சண்டைக் காட்சிகள் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தின் டீசர் அதிகாலை 5 மணிக்கு வெளியிட்டதால், பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கேஜிஎஃப் 2 கிளைமேக்ஸ் காட்சியில் ராக்கி கப்பலைச் செலுத்திக்கொண்டிருக்கும்போது அவருக்கு அருகிலிருக்கும் கடிகாரத்தில் அதிகாலை 5 மணி என குறிப்பிடும்படி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், சலாருக்கும் கேஜிஎப்க்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.