ரஜினிகாந்த் - மாரிசெல்வராஜ் 
சினிமா செய்திகள்

மாமன்னன்; சமத்துவத்தை வலியுறுத்தும் அருமையான படைப்பு! - ரஜினிகாந்த்

Staff Writer

மாமன்னன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், "சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு" என்று பாராட்டியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

தமிழகத்தில் முதல்நாளில் அதிக டிக்கெட்கள் விற்பனையானதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இப்படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் படக்குழுவினரை வாழ்த்தி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.