கமல் 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
சினிமா செய்திகள்

கமல்ஹாசன் - ஹெச்.வினோத் கூட்டணியில் வெளியானது புதிய அறிவிப்பு!

Staff Writer

ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், அஜித்துடன் துணிவு திரைப்படத்திற்குப் பிறகு வினோத் இன்னும் புதிய படம் எதிலும் ஒப்பந்தமாகவில்லை.

இந்தநிலையில், ஹெச். வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் கமல் 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நெஷனல் வெளியிட்டுள்ளது.

‘ரைஸ் டூ ரூல்’(rise to rule) என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள காட்சிகள் இது அரசியல் படமென்பதை உறுதிசெய்கின்றன. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.