ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் 
சினிமா செய்திகள்

ஜவான் திரைப்படத்தின் முன்னோட்டம்: மொட்டையுடன் தோன்றும் ஷாருக்!

Staff Writer

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.

இயக்குநர் அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க, நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தீபிகா படுகோன், சஞ்சய் தத் இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார்.

இந்த நிலையில், ட்ரெய்லருக்கு முன்பாக ‘ஜவான்’ படத்தின் ஒரு சிறிய முன்னோட்டத்தை இன்று காலை படக்குழு வெளியிட்டது. இது தொடர்பான அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.

தற்போது வெளியாகியிருக்கும் முன்னோட்டத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, தீபிகா படுகோன், மற்றும் பிரியாமணி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இந்த திரைப்படத்திற்காக ஷாருக்கான் மொட்டையடித்திருப்பது முன்னோட்ட வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் இடம் பெற்றிருக்கிறார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.