இயக்குநர் ஷங்கர் 
சினிமா செய்திகள்

'மாவீரன் படத்தில் காமெடி காட்சிகள் சிறப்பாக உள்ளன' – இயக்குநர் ஷங்கர் பாராட்டு!

Staff Writer

மாவீரன் படத்தின் திரைக்கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ளதாக இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் யோகி பாபு ஆகியோரது நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் மாவீரன். ரூ. 35 கோடி செலவில் இத்திரைப்படம் ரூ. 32 கோடிகளுக்கு அமேசான் பிரைம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றுள்ளது.

மாவீரன் திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ.7.6 கோடியும், இந்திய அளவில் ரூ. 8.5 கோடியும், உலகளவில் 10 கோடியும் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மாவீரன் திரைப்படம் குறித்து இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாவீரன் படம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இயக்குநர் மடோன் அஸ்வினின் திறமை, அவர் சினிமாவில் நிலைத்து நிற்பார் என்பதை காட்டுகிறது. மாஸான சிறந்த பொழுதுபோக்கு படம். காமெடி காட்சிகள் சிறப்பாக உள்ளன. சிவகார்த்திகேயன் பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடிகை அதிதி, சரிதா, யோகி பாபு, மிஸ்கின் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர்.” என பதிவிட்டுள்ளார்.