கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த ஆண்டில் வெளியான படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் பின்வருமாறு:
சிறந்த படங்கள்
1. சிறந்த படம் முதல் பரிசு - தனி ஒருவன்
2. சிறந்த படம் இரண்டாம் பரிசு - பசங்க 2
3. சிறந்த படம் மூன்றாம் பரிசு - பிரபா
4. சிறந்த படம் சிறப்புப் பரிசு - இறுதிச்சுற்று
5. பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு) - 36 வயதினிலே
தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்
1.சிறந்த நடிகர் - ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று)
2. சிறந்த நடிகை - ஜோதிகா (36 வயதினிலே)
3. சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு - கௌதம் கார்த்திக் (வை ராஜா வை)
4. சிறந்த நடிகை சிறப்புப் பரிசு - ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
5. சிறந்த வில்லன் நடிகர் - அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
6. சிறந்த நகைச்சுவை நடிகர் - சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு)
7. சிறந்த நகைச்சுவை நடிகை - தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம்/ 36 வயதினிலே)
8. சிறந்த குணச்சித்திர நடிகர்- தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்)
9. சிறந்த குணச்சித்திர நடிகை - கவுதமி (பாபநாசம்)
10. சிறந்த இயக்குநர் - சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)
11. சிறந்த கதையாசிரியர் - மோகன் ராஜா (தனி ஒருவன்)
12. சிறந்த உரையாடலாசிரியர் - இரா.சரவணன் (கத்துக்குட்டி)
13. சிறந்த இசையமைப்பாளர் - ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்)
14. சிறந்தப் பாடலாசிரியர் - விவேக் (36 வயதினிலே),
15. சிறந்த பின்னணிப் பாடகர் - கானா பாலா (வை ராஜா வை)
16. சிறந்த பின்னணிப் பாடகி - கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே)
17. சிறந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி (தனி ஒருவன்)
18. சிறந்த ஒலிப்பதிவாளர் - ஏ.எல்.துக்காராம் ஜெ.மஹேச்வரன் (தாக்க தாக்க)
19. சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் - கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)
20. சிறந்த கலை இயக்குநர்- பிரபாகரன் (பசங்க 2)
21. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - ரமேஷ் (உத்தம வில்லன்)
22. சிறந்த நடன ஆசிரியர் - பிருந்தா (தனி ஒருவன்)
23. சிறந்த ஒப்பனைக் கலைஞர் - சபரி கிரீஷன்(36 வயதினிலே/ இறுதிச்சுற்று)
24. சிறந்த தையற் கலைஞர் - வாசுகி பாஸ்கர் (மாயா)
25. சிறந்த குழந்தை நட்சத்திரம்
1) மாஸ்டர் நிஷேஸ்
2) பேபி வைஷ்ணவி
(பசங்க 2)
26. சிறந்த பின்னணிக்குரல் (ஆண்) - கௌதம் குமார் (36 வயதினிலே)
27. சிறந்த பின்னணிக்குரல் (பெண்) - ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட- தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2014 – 2015
1. சிறந்த இயக்குநர் - கே.மோகன் குமார் (புர்ரா)
2. சிறந்த ஒளிப்பதிவாளர் - விக்னேஷ் ராஜகோபாலன் (கண்ணா மூச்சாலே)
3. சிறந்த ஒலிப்பதிவாளர் - வி.சதிஷ் (கண்ணா மூச்சாலே)
4. சிறந்த படத்தொகுப்பாளர் - ஏ.முரளி (பறை)
5. சிறந்த படம் பதனிடுவர் - வி.சந்தோஷ்குமார் (கிளிக்)
வரும் 6ஆம் தேதியன்று நடைபெறும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் வளர்ச்சி - செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனால் 39 விருதாளர்களுக்கும் காசோலையும், விருதாளர்களின் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்களும் வழங்கப்படும் என அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.