விஜய் டிவியில் வாரக் கடைசியில் ரசிகர்களைக் கவர்ந்திழுத்த நிகழ்ச்சிகளில் ஒன்று, குக்வித் கோமாளி. ஐந்தாவது தொடர் கடைசிக் கட்டம் இப்போது ஒளிபரப்பாகிவருகிறது.
இந்த நிகழ்ச்சியில் தொகுப்புரையாளர்களில் ஒருவரான மணிமேகலை திடீரென இனி வரமாட்டார் என அறிவிக்கப்பட்டது. என்ன நடந்தது என தொலைக்காட்சி ரசிகர்கள் இடையே பெரும் கேள்வி எழுந்தது.
மணிமேகலையின் சமூக ஊடகப் பக்கங்களில் ரசிகர்கள் கேள்விகளைக் கேட்டுவந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று மணிமேகலை இதுகுறித்து விளக்கம் அளிக்கும்வகையில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். இருபது மணி நேரத்தில் 25 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்தக் காணொலியைப் பார்த்துள்ளனர். 13ஆயிரத்து 700+ பேர் அவரிடம் தங்கள் எண்ணங்கள், கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில்தனி நிகழ்ச்சியை நடத்திவரும் பிரியங்கா, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களில் ஒருவராக வரும் நிலையில், அவரின் செயல்பாடு தொகுப்புரையாளர்களை மீறியதாக இருக்கிறது. பார்வையாளர்களிடம் எரிச்சலூட்டும் இந்த செய்கையை, சேனலும் அனுமதித்துவருகிறது.
இந்த நிலையில், அவரின் பெயரைக் குறிப்பிடாமல், குறிப்பிட்ட ஒரு தொகுப்புரையாளர் தான் மூத்த தொகுப்பாளர் எனக் கூறி வரம்புமீறி நடந்துகொள்கிறார்; அவரிடமும் தொடர்புடையவர்களிடமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதைப் பற்றி எடுத்துக்கூறியும் பயனில்லை; எனவே சுயமாரியாதையைக் காத்துக்கொள்வதற்காக இந்த நிகழ்ச்சியிலிருந்து விலக முடிவெடுத்தேன் என்று மணிமேகலை அந்தக் காணொலியில் தெரிவித்துள்ளார்.