அதிதி ராவ் - சித்தார்த் திருமணம் 
சினிமா செய்திகள்

தம்பதியர் ஆன அதிதி- சித்தார்த்: ‘நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோம்’

Staff Writer

திரையுலக நீண்ட காலக் காதல் ஜோடியான அதிதி ராவ்- சித்தார்த் இன்று முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

இரகசியமாக வைக்கப்பட்டிருந்த திருமண நிகழ்வை இருவரும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். 

தென்னிந்திய முறைப்படி நடைபெற்ற இத்திருமணத்தில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். 

திருமணத்துக்காக அதிதி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லெகங்கா சேலையை அணிந்திருந்தார். கூடவே ரூபி, தங்க நகைகளும் அவரின் தோற்றத்தைப் பொலிவாக்கின. 

சித்தார்த் எம்பிராய்டரி செய்யப்பட்ட குர்தாவும் வேட்டியும் அணிந்திருந்தார். 

திருமண நிகழ்வு அதிகாலை முதலே நடந்திருக்கிறது என்பதை அதன் ஒளிப்படங்கள் காட்டுகின்றன. 

பிரபலங்களின் ஒளிப்படைக் கலைஞர் ஜோசப் ராதிக்கின் ஒளிப்பதிவில் சூரிய ஒளியின் பின்னணியில் மணமக்கள் மணநாள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram