சினிமா

வீடு திரும்பிய அஜித்… தொலைபேசியில் நலம் விசாரித்த விஜய்!

Staff Writer

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அஜித் குமாரிடம், விஜய் தொலைபேசி மூலம் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித் குமாருக்கு, காதுக்கு கீழே கட்டி இருப்பது கண்டறியப்பட்டு ,அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் இன்று அதிகாலை வீடு திரும்பினார்.

இந்நிலையில், அஜித்தின் உடல் நலம் குறித்து விஜய் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அதேபோல், அஜித்தின் குடும்பத்தாரிடமும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், மருத்துவர் வழங்கிய அறிவுரைகள் குறித்தும் விஜய் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.