குணச்சித்திர நடிகரும் அ.தி.மு.க. ஆதரவாளருமான அருள்மணி(65) மாரடைப்பால் நேற்று இரவு சென்னையில் காலமானார்.
அ.தி.மு.க.விற்கு ஆதரவாக கடந்த பத்து நாள்களாக தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வந்த அருள்மணி, சென்னை திரும்பிய நிலையில் திடீர் மாரடைப்பால் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
தமிழில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் அருள்மணி, அரசியல் மேடை, இயக்குநர் பயிற்சி பள்ளி என பல பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
அழகி, தென்றல், தாண்டவகோனே போன்ற பல்வேறு திரைப்படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர், அ.தி.மு.க.வில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
தற்போது நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்துவந்தார்.
இந்த நிலையில், கடந்த பத்து நாள்களுக்கு மேலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவர் சென்னை திரும்பிய நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அருள்மணி உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ள. அருள்மணி இறப்பால் ரசிகர்கள் அ.தி.மு.க. தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.