???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
ராகுல் அவர்களே வருக.... நாட்டுக்கு நல்லாட்சி தருக!
Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   17 , 2018
image
தமிழர்களின் வாழ்விலும் வளர்ச்சியிலும் இன்றைய நாள் முக்கியமான நாள். மத நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்பட்டிருக்கிறது, அதனால், மோடியை எதிர்க்கிறோம்.
 
சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது, அதனால்,  மோடியை எதிர்க்கிறோம். மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருகிறது. அதனால், மோடியை எதிர்க்கிறோம். மோடியின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி போயிருக்கிறது. இன்னும் 5 ஆண்டு காலம் மோடியை ஆள விட்டால், நாடு 50 ஆண்டு காலம் பின்னோக்கி போய்விடும்.
 
தேர்தெடுக்கப்பட்ட பிரதமராக தன்னை நினைக்காமல், பரம்பரை பிரதமர்போல செயல்படுகிறார். தன்னையே உச்ச நீதிமன்றமாக, தன்னையே சி.பி.ஐயாக, தன்னையே குடியரசுத் தலைவராக, தன்னையே ரிசர்வ் வங்கியாக கருதிக் கொள்கிறார். அதனால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம். இது வெறுமனே, மோடியை எதிர்ப்பதற்காக மட்டும் அனைவரும் சேர்ந்திருக்கவில்லை.
 
ஜனநாயகத்தைக் காப்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளோம். தமிழகம் எந்தத் திட்டத்தை எல்லாம் எதிர்க்குமோ, அந்தத் திட்டத்தை எல்லாம் கொண்டுவந்து சேடிஸ்ட்(sadist) பிரதமராக செயல்படுகிறார். நாம், ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்துவோம். 1980-ல் நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக... என்றார் கருணாநிதி. 2004-ல் இந்திராவின் மருமகளே வருக.. இந்தியாவின் திருமகளே வெல்க.. என்றார் கருணாநிதி. கருணாநிதியின் மகனாக, தமிழகத்திலிருந்து ராகுல் காந்தியின் பெயரை நான் முன்மொழிகிறேன்.
 
ராகுல் காந்தி அவர்களே வருக.... நாட்டுக்கு நல்லாட்சி தருக.. பாசிச, நாசிச மோடியின் ஆட்சியை வீழ்த்தும் வல்லமை ராகுல் காந்திக்கு இருக்கிறது. ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்துவோம். ஜனநாயகத்தைக் காப்போம்.
 
- கலைஞர் மு. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்
 
 

 


 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...