???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதலமைச்சர் 0 கமல் ஊழலை திசை திருப்புகிறார்: திருமாவளவன் குற்றச்சாட்டு 0 பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் 0 கமல்ஹாசனின் அலுவலகத்தில் பலத்த போலீஸ் காவல் 0 சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு : 0 மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது : பிரேமலதா விஜயகாந்த் பேச்சு 0 பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் : ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகளை மூட உத்தரவு 0 சசிகலாவுக்கு கூடுதல் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு: டி.ஐ.ஜி. ரூபா 0 இந்தியை அலுவல் மொழியானால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் : மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்! 0 பக்கிங்காம் தடுப்பணையில் பராமரிப்பு இல்லை: உவர் நிலமாக மாறிய விவசாய நிலங்கள் 0 நாகையை சேர்ந்த மீனவர்களை சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம். 0 தோற்றாலும் சாதனை படைத்த மீரா குமார்! 0 வெளிநாட்டு வங்கிகளில் ரூ.19ஆயிரம் கோடி கருப்புப் பணம்: ஜேட்லி 0 ஊழல் தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்புங்கள்: கமல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
செயற்கையான வெற்றி!
Posted : புதன்கிழமை,   நவம்பர்   23 , 2016
image

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும், கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில், மூன்று தொகுதிகளிலும் வாக்களித்த 2,09,257 வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இடையறாதுழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், செயல் வீரர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும், எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

புதுவை நெல்லித் தோப்பு தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், அருமை நண்பர், புதுவை முதல்வர் வி. நாராயணசாமி அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது ஒன்றும் ஆச்சரியமோ, புதுமையோ இல்லை. அதிகார பலம் மற்றும் துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் மறைமுக ஆதரவு, அங்கிங்கெனாதபடி எங்கும் பண விநியோகம் ஆகியவற்றுக்கு முன்னால், தி.மு. கழகத்தின் கடின உழைப்பு முக்கியமானதாகக் கருதிப் பார்க்கப்படவில்லை. நாளை விளையும் நன்மையை விட, இன்று கைக்குக் கிடைக்கும் வாய்ப்பை எண்ணிக் களிப்புறும் போக்கு, ஆக்க பூர்வமான எதிர் காலத்திற்கு அடிப்படையாகாது என்பதை அனைவரும் உணர வேண்டுமென விரும்புகிறேன். பணநாயகம் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது; அதுவே இந்த இடைத்தேர்தல்! செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது!

- மூன்று தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர்  மு. கருணாநிதி அறிக்கை

 
 

 


 

மற்றவை

மேலும்...
கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...