???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவிப்பு! 0 குண்டர் சட்டம் பயன்பாடு: மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: சனல் குமார் சசிதரன் அறிக்கை! 0 ராஜினாமா செய்தார் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே! 0 நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு மந்திரி சபை ஒப்புதல்! 0 கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்: விஷால் அறிக்கை! 0 ஆவணப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை வழங்க முடியும்: ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் நேர்காணல்! 0 கந்துவட்டி கொடுமை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் தற்கொலை 0 மனங்கள் இணையவில்லை என்பது அடிமட்ட தொண்டர்களின் கருத்து: மைத்ரேயன் 0 மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2-ம் தேதிக்கு மாற்றம்! 0 போய்ஸ் கார்டனில் சோதனை நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி: செங்கோட்டையன் திட்டம் 0 பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும்: நீதிமன்றம் 0 சத்துணவு முட்டை நிறுத்தமா?: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
அவலம்!
Posted : புதன்கிழமை,   நவம்பர்   09 , 2016
image

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து விட்டு, இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை இது; கறுப்புப் பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்குக் காரணமாக உள்ளது என்றும் காரணம் கூறியிருக்கிறார். வரவேற்கத் தக்க அறிவிப்பு இது என்ற போதிலும், இந்த அறிவிப்பின் காரணமாக, நாட்டிலே உள்ள பெரிய செல்வந்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட நடுத்தர மக்களும், ஏழையெளிய மக்களும், சிறு வணிகர்களும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்களும் தங்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டை வாங்குவதற்கு யாரும் முன்வராத நெருக்கடியான நிலையில், தெருக்களிலே அலை மோதுகின்ற அவலத்தைத் தான் இந்த அறிவிப்பின் காரணமாக காண முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாத ஊதியம் பெறுபவர்களிடம் மட்டுமின்றி நாள் ஊதியம் பெறும் ஏழை எளிய மக்களிடமும் புழக்கத்தில் உள்ளது என்பதை மறுக்க இயலாது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் எழுந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்குக் கூட வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கறுப்புப் பணம் இன்று யாரிடம் உள்ளது? நான் கூறிய அந்த ஏழையெளிய உழைத்துப் பிழைக்கும் பிரிவினரிடமும், நடுத்தரக் குடும்பத்தினரிடமும் இருக்கிறதா என்றால் கிடையாது. வங்கிகளிலே கோடிக் கணக்கில், இலட்சக் கணக்கில் பணம் வைத்திருப்போர் - சேர்த்து வைத்த கறுப்புப் பணத்தில் பெரும் பகுதியை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று பல்வேறு வடிவங்களில் பாதுகாப்பாக வைத்திருப்பது போக, தங்களிடம் எஞ்சி உள்ள ஒரு சில கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வைத்திருப்போர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகி வருகிறது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எனச் சொல்லப்படுவதால் வரவேற்கலாம். எனினும், பெரிய பெரிய பணக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்வதை விட, சாதாரண, நடுத்தர ஏழையெளிய மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

- திமுக தலைவர் மு. கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை

 
 

 


 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...