???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நடிகர்களின் பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் தடை 0 பாபர் மசூதி வழக்கு: அத்வானி ஆஜராக உத்தரவு 0 சிறையில் என்னை ஆராய்ந்தேன்!: வைகோ 0 ஆன்லைனில் தமிழக அரசு மீன் விற்பனை! 0 பாலில் ரசாயனமா?: நிறுவனம் மறுப்பு 0 கெட்டுப்போனால்தான் பால்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 வைரவிழா அழைப்பிதழை பெற்றுக்கொண்டார் கருணாநிதி 0 'பிரதமருக்குக் கிடைத்த அடிமைகள்': துரைமுருகன் தாக்கு 0 வைகோவிற்கு ஜாமின் 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது 0 42வது நாளாக நெடுவாசல் போராட்டம்! 0 புலன் மயக்கம் -40 - வயது வந்தவர்களுக்கு மட்டும்- ஆத்மார்த்தி எழுதும் தொடர் 0 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
மறுபிறவி எடுத்துள்ளேன்!
Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   14 , 2016
image

என் மீது மிகுந்த அன்பும் பற்றும் அக்கறையும் கொண்டு தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் நீங்கள் செய்த பிரார்த்தனைகளாலும் வழிபாடுகளாலும் நான் மறுபிறவி எடுத்துள்ளேன்.
உங்களுடைய பேரன்பு இருக்கையில் எனக்கு என்ன குறை..!

இறைவனின் அருளால் நான் வெகு விரைவில் முழுமையான நலம் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருக்கிறேன்.நான் பொதுவாழ்வுக்கு வந்த நாள் முதல் தமிழக மக்களுக்காகவும் அதிமுகவின் வளர்ச்சிக்காகவும் நொடிப் பொழுதும் சலிப்பில்லாமல் பாடுபட்டு வருகிறேன்.

தொண்டர்கள் சிலர் அன்பு மிகுதியால், உயிரையே மாய்த்துக் கொண்டனர் என்பதை அறிந்து நான் மிகுந்த மன வேதனையுற்றேன். இப்போது அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வருகிற 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற நீங்கள் முழு மூச்சுடன் பாடுபட வேண்டும் என இந்த அறிக்கை மூலமாகக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதியில் வாழும் வாக்காளர்களையும், கட்சி நிர்வாகிகளையும் என்னால் நேரில் சந்திக்க இயலவில்லை என்றபோதும், என்னுடைய எண்ணமும், இதயமும் எப்பொழுதும் உங்களுடனேயே இருக்கின்றன.

எனது இந்த அறிக்கையின் இயல்பைப் புரிந்துகொண்டு இரட்டை இலைச் சின்னம் வெற்றிபெற கடமை உணர்வோடு பணியாற்றுங்கள். அதிமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மனதில் கொண்டு, உங்கள் அன்பையும், ஆதரவையும் அதிமுகவுக்கு வழங்க வேண்டும். கட்சியின் தொண்டர்கள் ஒவ்வொருவரும், அதிமுக வெற்றியே தமது வெற்றி என்ற லட்சிய வேட்கையோடு, கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் கடமை உணர்வோடு பணிகளை ஆற்றிட வேண்டும். அதிமுக வெற்றி எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் அமைந்திட வேண்டும். அத்தகைய வெற்றிச் செய்திக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

- முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

 
 

 


 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...