???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரயில்வே வாரியத் தலைவராக அஷ்வனி லோகனி நியமனம். 0 நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நாளை கலந்தாய்வு. 0 ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியான சம்பவம்: 6 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு. 0 சொத்துக்குவிப்பு வழக்கு : சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி. 0 நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது: ஸ்டாலின் 0 சபாநாயகரை முதலமைச்சராக்க வேண்டும்: திவாகரன் யோசனை 0 தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம் 0 நீட் விலக்கு: 4-ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் 0 பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிடுங்கள்: ஸ்டாலின் கடிதம் 0 ஓபிஎஸ்ஸுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு 0 அதிமுகவிலிருந்து வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 வீட்டில் இருந்த துப்பாக்கியால் விபரீதம்: திருச்சி மாணவர் பலி 0 முத்தலாக் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் வரவேற்பு 0 புலன் மயக்கம் - 52 - வித்யாசமாய் ஒரு சாகரம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர். 0 கருணாநிதியை இன்று சந்திக்கிறார் வைகோ!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
ஜனநாயக படுகொலை!
Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   13 , 2017
image

திமுக முதன்மை செயலர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் மும்பையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் சொன்னது:

ஒரு மாநிலத்தில் நடைபெறுகிற இடைத்தேர்தலில் ஒரு முதலமைச்சரே தலைமை தாங்கி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. இதைவிடக் கேவலம் தமிழகத்திற்கு வேறொன்றும் இருக்க முடியாது. இது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இந்த அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கைகளை ஆளுநர்தான் எடுக்க வேண்டும். யார் எந்தப்புகாரை கொடுத்தாலும் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடுக்கிறபோது ஆளுநருடைய பரிந்துரை தேவைப்படுகிறது. எனவே தெரிந்தே தவறிழைக்கின்ற ஆளுங்கட்சி முதல்வரும், அமைச்சர்களும் அதிகார துஷ்பிரயேகத்தை பயன்படுத்தி அதிகாரிகளையும், காவல்துறையினரையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காரணத்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல இது குறித்து விசாரிப்பதற்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்.

இந்த ஆட்சி மேலும் தொடர்வது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எனவே இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென்றும் நாங்கள் ஆளுநரிடம் மனுக் கொடுத்து விட்டு வந்திருக்கிறோம். 22 நிமிடங்களாக எங்களது கோரிக்கை குறித்து ஆளுநர் விவாதித்தார். தானும் இந்த விவகாரம் குறித்து அறிந்திருக்கிறேன். ஓரிரு நாட்களில் சென்னைக்கு வந்த பிறகு இந்த விவகாரம் குறித்து மற்றவர்களிடமும் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கிறேன் என ஆளுநர் நம்பிக்கை அளித்திருக்கிறார்.

 
 

 


 

மற்றவை

மேலும்...
கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...