அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 122 
|
-
வைரஸ் போர்!
இந்தியா மீது சீனா மறைமுகமாக கொரோனா வைரஸ் போரை தொடுக்கிறது - கைலாஷ் விஜய்வர்கியா, பாஜக பொதுச்செயலாளர் பேச்சு
-
புள்ளிகளுக்கும், சுள்ளிகளுக்கும் ஒரு செய்தி!
வீழ்த்துவோம் என்று கொக்கரிக்கும் பழைய புள்ளிகளுக்கும், சுள்ளிகளுக்கும் ஒரு செய்தி. விதை விழுந்தாலும் மண்ணைப் பற்றி விட்டால் விரைவில் அது காடாகும். நாளை நமதாகும். - கமல்ஹாசன் பேச்சு
-
அகந்தை!
ஒருபக்கம் பெருந்தொற்று இருக்கும்போது. அதற்கு மேலாக நமது தலைவர் (பிரதமர் மோடி) அகந்தை பிடித்தவராக இருக்கிறார் - ராகுல் காந்தி ட்வீட்
-
அவமானம்!
”நாங்கள் அவமானப்படுகிறோம், வெட்கப்படுகிறோம். பல மாநிலங்கள் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை”. - மம்தா பானர்ஜி
-
சர்வாதிகாரம்
மக்கள் நீதி மய்யத்தில் சர்வாதிகாரம் தலைத் தூக்கி ஜனநாயகம் அற்றுப்போய் விட்டது – கட்சியிலிருந்து விலகிய முருகானந்தம் பேட்டி!
-
குழி!
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், இந்திய அரசு அமைப்புச் சட்டத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. - வைகோ அறிக்கை!
-
கர்ணன் பரம்பரை!
ஆட்சியில் இருந்த போது கர்ணன் பரம்பரையை சேர்ந்தவர்கள் போல் மக்களுக்கு உதவி செய்தோம் – செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி!
-
ஏன்!
மோடி ஜீ ஏன் எங்கள் குழந்தைகளின் கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறீர்கள்? – ராகுல் காந்தி ட்வீட்
-
வேடிக்கை!
80 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போடுகிற பொறுப்பை மாநிலங்கள் தலையில் சுமத்திவிட்டு மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது - கே.எஸ்.அழகிரி அறிக்கை!
-
மோடியை காணவில்லை!
தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமர் மோடியை காணவில்லை - ராகுல் காந்தி ட்வீட்!
-
சங்கிலியை உடைத்துவிடலாம்
சங்கிலியை உடைத்துவிடலாம்
14 நாள்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்தால், கொரோனா பரவல் சங்கிலியை உடைத்துவிடலாம். ஊரடங்கின் போது மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தொற்றுப் பரவலைக் குறைத்துவிடலாம். எனவே முழு ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்.
- தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
-
அம்மா உணவகம்!
அம்மா உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும் - இபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை!
-
சீடர்!
பழனிசாமி பாஜகவின் சீடராக மாறிவிட்டார். அதுவே அதிமுகவின் தோல்விக்கு காரணம் – ப.சிதம்பரம் பேட்டி
-
செல்லுபடியாகாது!
பிற மாநிலங்களைப்போல மதவாதம் கேரளாவில் செல்லுபடியாகாது - பினராயி விஜயன் பேட்டி!
-
தீர்வு!
நாமே தீர்வு – கமல்ஹாசன் அறிக்கை
-
இசை!
நானாவது எனது இசை மூலமாக மக்களுக்கு கொஞ்சம் நல்லது செய்து இருக்கிறேன். நீங்கள் உலக நலனுக்கு என்ன செய்து இருக்கிறீர்கள்? - யுவன் சங்கர் ராஜா
-
அறை விழும்!
'பொய் சொன்னால் ஓங்கி அறை விழும்' - ட்விட்டரில் நடிகர் சித்தார்த்
-
கொரோனா புயல்!
கொரோனா புயல் நாட்டையே அசைத்துப் பார்த்து விட்டது – பிரதமர் மோடி பேச்சு!
-
ஒய்யார விளம்பரம்!
மத்திய அரசின் ஒப்பனைகளும், ஒய்யார விளம்பரங்களும் வெளிவர தொடங்கியுள்ளன – கி. வீரமணி அறிக்கை!
-
பிரதமரே இல்லை!
ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரே இல்லை – கமல்ஹாசன் அறிக்கை!
-
நாடகக் குழு
தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் குழு – சென்னையில் சீமான் பேச்சு!
-
டெண்டர் அரசு!
’டெண்டர் அரசின்’ சாதனைப் பட்டியலில் கோவை பெரியகுளம் தடுப்புச் சுவரும் இணைந்திருக்கிறது – கமல்ஹாசன் அறிக்கை!
-
அலட்சியம்!
அரசின் அலட்சியத்தைத் திசை திருப்புவதிலேயே பிரதமர் மோடி அக்கறை காட்டுகிறார் – மு.க.ஸ்டாலின் அறிக்கை
-
பழி!
பகுத்தறிவை அடகு வைத்து விட்டு ஒரு சமுதாயத்தின் மீது பழி சுமத்துவது அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல – மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
-
அநாகரிகம்!
எதிர் அணி வேட்பாளரைப் பொறுக்கி என்று பேசும் அநாகரிகம் என்னிடம் இல்லை – சுப.வீரபாண்டியன் ட்வீட்
|
|