???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன் 0 வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை 0 தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு 0 எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது 0 நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
 • அரசியலுக்கு வந்துவிட்டேன்!

  img

  ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க"

   

  எல்லாத் துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள். என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன். சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச்சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னை போல் வெகு சிலரைத் தவிர, மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர்.  இது என் குரல் துணிவுள்ள சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே,…

   
 • எண்ணெய் என்பது தீப்பிடிக்கும் பொருள்!

  img

  ”காவிரிப்படுகை முழுக்க எண்ணெய் எடுக்கும் திட்டத்தை விரிவுப்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறது ஓ.என்.ஜி.சி. நிறுவனம். இதனால் கதிராமங்கலம் மட்டுமன்றி ஒட்டுமொத்த காவிரிப்படுகையிலும் எரிவாயு எடுக்கவே காவிரியில் தண்ணீர் மறுக்கப்படுகிறதோ என்கிற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதன் சிறுசிறு பொறிகளே நெடுவாசலும் கதிராமங்கலமும்.

   

  சாம்பலுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பை, அரசு உணர வேண்டிய காலம் இது. காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பது அல்லது…

   
 • சட்டத்தை கையில் எடுக்கலாமா?

  img
  பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்கும்படி மாநில அரசுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். பசுவின் பெயரில் இதுபோன்று நடைபெறும் வன்முறைகளுக்கு அரசியல் அல்லது மத சாயம் பூசக்கூடாது. இதனால் தேசம் பலன் பெறாது. பசு தாயை போன்றது என்ற நம்பிக்கையானது பரவலாக உள்ளது, இதனால் மக்கள் அவர்களுடைய கையில் சட்டத்தை எடுக்கக்கூடாது.
   
  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான அனைத்துக்கட்சி கூட்டத்தில்…
   
 • அதையெல்லாம் நீக்க முடியவில்லையே!

  img
  காயத்ரிக்கு நான் திரைக்கதை எழுதிக்கொடுத்திருந்தால், அது என் பொறுப்பாக ஏற்றுக் கொண்டு நான் மன்னிப்பு கேட்க முடியும். மேலும் அதை எப்படி சென்சார் செய்ய முடியும். நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் அதையும் விட மோசமான வார்த்தைகள் பேசப்பட்டு வருகிறது. அதையெல்லாம் நீக்க முடியவில்லையே!
   
   
  பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் ‘சேரி பிஹேவியர்’ குறித்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன்…
   
 • நெடுவாசலில் மீத்தேன் திட்டம் செயல்படாது: சட்டசபையில் அமைச்சர் தகவல் :-

  img

  ” நெடுவாசல்  பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே தமிழக முதல்-அமைச்சர் பிரதமரைச் சந்தித்து நமது உணர்வுகளை தெரிவித்து இருக்கிறார். மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த மே மாதம் 16-ந்தேதி மத்திய அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்து இருக்கிறது. அதில் மாநில அரசின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறோம். நீங்கள் விரும்பாவிட்டால், அந்த திட்டம் அனுமதிக்கப்படாது என்று தெரிவித்து இருக்கிறது. எனவே நெடுவாசல் திட்டம் செயல்படாது, அதற்கு…

   
 • புதுச்சேரியில் ஆளுநர் மூலம் தனி அரசு நடத்துவதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்: ஸ்டாலின்

  img

  புதுச்சேரியில் ஆளுநர் மூலம் தனி அரசாங்கம்  நடத்துவதை மத்திய அரசு  இனியாவது  நிறுத்திக் கொள்ள வேண்டும் . இதே போன்று டெல்லி, மேற்குவங்கத்திலும் ஆளுநர் மூலம் தனி அரசை  மத்திய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த கண்டிக்கத்தக்க மத்திய அரசின் செயலால் ”ஆட்டுக்குத் தாடி போல நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை” என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

   

  # திமுக செயல்தலைவர்   மு.க. ஸ்டாலின்…

   
 • ஆகஸ்ட் 4க்குப் பிறகு கட்சிப்பணிகளில் தீவிரம் : டி.டி.வி. தினகரன்

  img

  ’’அதிமுகவில் இரண்டு அணிகளும் இணைவது பற்றிய பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அமைச்சர் கூறியது குறித்து எனக்கு எதும் தெரியாது. ஆனால் அதிமுகவில் இரண்டு அணிகளும் இணைவது சாத்தியம்தான். 60 நாட்கள் பொறுமையாக இருக்கும்படி கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கட்சியில் இருந்து நான் சற்று விலகி இருக்கிறேன். ஆகஸ்ட் 4க்குப் பிறகு கட்சியின் இணைப்புக்கு தீவிரமாக செயலாற்றுவேன். என்னால் அதிமுகவின் இரண்டு அணிகளையும் இணைக்க முடியும். என்னை சந்திக்க…

   
 • தமிழகத்துக்காகத்தான்!

  img

  " காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவே மேகதாதுவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளோம். தமிழக அரசு எப்போதும் உண்மையை ஒப்புக்கொள்வது இல்லை. மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை மத்திய அரசின் நீர் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த அணை கட்ட…

   
 • திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது!

  img
  திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது!
   
  தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி சம்பந்தமான சர்ச்சையினையடுத்து, நடிகரும் நண்பருமான எஸ்.வி.சேகர் என்னிடம் அலைபேசியில் பேசினார். சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில், “நீங்கள் சொல்வதை கவனிக்கிறேன்” எனத் தெரிவித்து, அது பற்றிக் கவனம் செலுத்துமாறு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்களிடம் தெரிவித்தேன். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வந்தநிலையில், மக்கள் பிரச்னைகளில் தொடர்ந்து…
   
 • கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும்: ஜி.கே.வாசன்

  img

  ” கதிராமங்கலத்தில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையைவிட, இங்கு தென்படும் போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பெரும்பான்மையான மக்கள் விரும்பாத திட்டத்தை அரசு திணிக்கக்கூடாது. கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுப்பதால் குடிநீர் பாதிக்கப்பட்டு விட்டது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இதுபோன்ற பணிகளை பாலைவனத்தில் மேற்கொள்ள வேண்டுமே தவிர, குடியிருப்புகள், விவசாய நிலங்களில் மேற்கொள்ள கூடாது.’’

   
 • முதல் மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத் ஏன் தொழுகையில் கலந்து கொள்ளவில்லை?

  img

  “ முன்னாள் முதல்வரான நான் இந்தத் தொழுகையில் பங்கேற்றுள்ளேன். ஆனால், இப்போது முதல் மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத் ஏன் கலந்து கொள்ளவில்லை? இதற்கு அவர் கண்டிப்பாகப் பதிலளிக்க வேண்டும்”.

   

  -    உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் – 

   
 • நீட் தேர்வு: தமிழக மாணவர்களின் பின்னடைவுக்கு மத்திய அரசே காரணம்

  img

  ''நீட் தேர்வு தர வரிசையில் முதல் 25 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கூட இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. சிபிஎஸ்இ பாடத் திட்டம் வேறு மாநில அரசின் பாடத்திட்டம் வேறு என்பதால் நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்குப் பொருந்தாது என பலமுறை அறிவுறுத்தப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மத்திய அரசின் இலாகாவிலேயே இன்னும்   கிடப்பில் இருக்கிறது. குடியரசுத்தலைவருக்கு…

   
 • ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்

  img

  நான் அரசியலுக்கு வருவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். பல்வேறு தரப்பிலிருந்தும் என்னை அரசியலுக்கு வரச்சொல்லி வற்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. முடிவு எடுத்தவுடன் உங்களிடம் தெரிவிக்கிறேன்.

   

  - நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசம் குறித்து

   
 • சசிகலாவுடன் சந்திப்பு

  img

  இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. குடும்ப ரீதியான சந்திப்பு என்பதால் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை.சசிகலா எனது சித்தி என்பதால் அவரைத் தொடர்ந்து சந்தித்து வருகிறேன்.

   

  - பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்தித்த பின்னர் டி.டி.வி. தினகரன்.

   
 • ஸ்டாலினுக்கு நிகரான தகுதி!

  img

  எதிர்க்கட்சிகள் கூறுவது போல் எந்தக் கோப்புகளும் நிலுவையில் இல்லை. நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் பேரவைக்குள் நுழைந்த நாளிலேயே நானும் பேரவைக்கு வந்தேன். எனக்கும் எல்லா தகுதிகளும் இருக்கிறது. தேர்தல் ஆணையம் தன் மீதும், அமைச்சர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்வது குறித்து எந்தவிதத் தகவலும் இல்லை.

  - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியது...

   
 • தொண்டர்கள் உறுதி

  img
  ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆதரவு எனக்குத்தான் இருக்கிறது. ஜெயலலிதா இடத்துக்கு நான் வரவேண்டும் என்பதில் தொண்டர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
   
  -அதிமுக-ஜெ.தீபா அணி பொதுச்செயலாளர் தீபா பேட்டி
   
 • சுதந்திரப் போராட்டத்திற்கு தயார்!

  img


   
  விழாவின் நாயகர் கருணாநிதி இங்கே இருந்திருக்க வேண்டும். அவரை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தோம். உடல்நிலை தேறிவரும் நிலையில் வெளியில் அழைத்துச் சென்றால் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறியதால் அவரை அழைத்து வர முடியவில்லை. திமுகவை தொடர்ந்து கருணாநிதி வழி நடத்துவார். இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி திணிக்கப்படுவதையே நாங்கள் எதிர்க்கிறோம். நாட்டை காவிமயமாக்க மத்திய…

   
 • சூதாட்டமும், சினிமாவும் ஒன்றல்ல !

  img

  சூதாட்டமும், சினிமாவும் ஒன்றல்ல வேறு வேறு. திரைப்படம் ஒரு கலை என்று கூறினார். திரைத்துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். சினிமாவை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்திய அரசியல் தலைவர்கள் உள்ளனர். ஜிஎஸ்டி வரியோடு நாங்கள் வருமான வரியும் கட்டவேண்டும். நாடு முழுவதும் வெளியாகும் இந்திப் படங்களுக்கு இந்த வரியை விதிக்கலாம். ஆனால் பிராந்திய மொழிப் படங்களுக்குப் பொருந்தாது. தேவையுமில்லை. எனவே, சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும்…

   
 • போர்...போர்!

  img

  முதல்ல உங்களுக்கெல்லாம் நான் நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வளவு ஒழுக்கமா, இவ்வளவு கட்டுப்பாடா இருந்தது, பழகினதுக்கு நன்றி. ஒழுக்கம்தான் வாழ்க்கையில முக்கியம். அது இல்லைன்னா முன்னேற முடியாது. அதை தெளிவா கடைப்பிடிச்சீங்க. தொடர்ந்து அதை கடைபிடிங்க.

  மீடியா என்னை விரட்டுவிரட்டுன்னு விரட்டினாங்க. நானும் சென்னையெல்லாம் சுத்திட்டேன். ஏன்னா, நாலஞ்சு வார்த்தை நான் பேசினாலே சர்ச்சையாகுது. இன்னும் பேசிட்டே இருந்தா இன்னும் சர்ச்சையாகிட்டே இருக்கும். அதனால ஊடகங்களை…

   
 • எப்படி அழைப்பது?

  img
  திராவிட இயக்கங்களை ஒழிப்பதுதான் எங்களுடைய முதல் வேலை என்று சொல்லி வருகின்றனர். இப்படிச் சொல்பவர்களை அழைத்து வந்து கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா நிகழ்ச்சி மேடையில் உட்கார வைத்து அவர்களுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த நாங்கள் தயாராக இல்லை. அதனால் அவர்கள் அழைக்கப்படவில்லை.
   
  கொளத்தூர் முத்துமாரியம்மன் கோயில் குளத்தைத் தூர்வாரும் பணியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம்…
   
 • அண்ணன் தம்பிகள்!

  img
  சசிகலா குடும்பத்தை அகற்றினால் நாங்கள் எல்லாம் அண்ணன் -தம்பிகள். கருத்துவேறுபாடுகளை முதலில் அகற்றி விட வேண்டும். சுமூகமான சூழல் அமையும் போது பேச்சுவார்த்தை நடைபெறும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் எண்ணம் உள்ளவர்கள் எதிரணியிலும் உள்ளனர். சின்னத்தைப்பெற தேர்தல் கமிஷனுக்கே பணம் கொடுத்து கட்சியை வளைக்கப் பார்த்திருக்கிறார் டிடிவி.தினகரன். அவரைக் கைது செய்ததன் மூலம் சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது.
   
  - டிடிவி தினகரன் கைதுக்குப்…
   
 • ஜனநாயக படுகொலை!

  img

  திமுக முதன்மை செயலர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் மும்பையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் சொன்னது:

  ஒரு மாநிலத்தில் நடைபெறுகிற இடைத்தேர்தலில் ஒரு முதலமைச்சரே தலைமை தாங்கி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. இதைவிடக் கேவலம் தமிழகத்திற்கு வேறொன்றும் இருக்க முடியாது. இது தண்டனைக்குரிய குற்றம்…

   
 • பினாமி அரசு !

  img

  மாநில தேர்தல் ஆணையம் தற்போதைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என கூறுகிறது. இது ஏனென்றால், தற்போது தேர்தலை நடத்தினால் சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி அரசு மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். இதனால் அவர்கள் தேர்தலை சந்திக்க தயாராக இல்லை. எனவே மாநில தேர்தல் ஆணையம் மூலம் குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தலை நடத்த முடியாது என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிமன்றமும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

   
 • நான் அரசியல்வாதி அல்ல!

  img
   
  நான் இரண்டு விஷயங்களுக்காக இலங்கை செல்ல சம்மதித்தேன்...ஒன்று: தமிழகளுக்காக வீடுகளை திறந்து வைப்பது, இன்னொன்று: காலம்காலமாய் தங்களின் மண்ணிற்காகவும், உரிமைக்காகவும் போராடி உயிர்நீத்த வீரர்கள் வாழ்ந்த இடத்தை சென்று பார்க்க விரும்பினேன். அந்த வீரர்கள் சுவாசித்த காற்றை நானும் சுவாசிக்க வேண்டும் என்று ஆசைபட்டேன். அதுமட்டுமில்லாது, இலங்கை அதிபரை சந்தித்து, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், சிறைபிடிப்படுவதையும் நிறுத்த சுமூகமான தீர்வுகளைக் காணவும் வேண்டுகோள் வைக்க இருந்தேன்.…
   
 • மகிழ்ச்சியின் உச்சம்; வருத்தத்தின் மொத்தம்!

  img
  தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக சபாநாயகராக பதவியேற்று பணியாற்றிய போது நடுநிலையோடு பணியாற்றியதாக கூறி ஜெயலலிதா என்னை பாராட்டினார். அந்த தருணம் நான் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்த தருணம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் குறிப்பை வாசித்த தருணம், என்னஒ மிகவும் வருத்தத்தில் ஆழ்த்திய தருணம். சபாநாயகர் பதவியில் மகிழ்ச்சியின் உச்சத்தையும் வருத்தத்தின் மொத்தத்தையும் அனுபவித்து விட்டேன். இந்த தீர்மானம் மீது எடுக்கப்படும் முடிவு எனக்கு எந்த…
   
 
1 2 3 4 5 6 7 8 9 Next 9

 

 

 

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...