???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 தமிழக விவசாயிகளின் நலன்களை காவு கொடுக்க மத்திய அரசு தயாராகி விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 பண மோசடி வழக்கு : செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு 0 முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு : கேரளா முதல்வர் பேட்டி 0 அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள்:முதல்வர் அறிவிப்பு 0 இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்:பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்! 0 கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு: தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
 • பாஜகவில் டீக்கடைக்காரர்கூட பிரதமர் ஆகலாம்!

  img
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் சட்டமன்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காஷ்மீர் மாநிலத்தில் தந்தை - மகன் ஆட்சிகள்தான் மாறி மாறி நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை மக்களுக்கு ஆட்சி நிர்வாகத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
   
  ஜனநாயகத்தை அரித்து தின்னும் கரையான்களாக வாரிசு அரசியல் இருக்கிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் வேர்களையே அரித்து விடும். இங்கே வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம்…
   
 • ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்!

  img
  திராவிட முன்னேற்றக் கழகத்தின், துணைப் பொதுச் செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்து விட்டதாக – தவறான – ஜமக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய்யை, ஒரு செய்தியாக ஆக்கி சில பத்திரிக்கைகள் பெரிதாக வெளியிட்டிருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.
   
  திமுக தான் என்றும் என் கட்சி, தலைவர் கலைஞர் தான் என்றும் என் தலைவர் தளபதி ஸ்டாலின் எங்கள் வழிகாட்டி இது தான்…
   
 • பினாமி ஆட்சியில் உயர்ந்தது!

  img
  பினாமி ஆட்சியில் உயர்ந்தது!
   
  மின்சார  கொள்முதல் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் பேசினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திமுக  தலைவர் கலைஞரை பற்றி தேவையற்ற வகையிலும் கொச்சைப்படுத்துகின்ற வகையிலும் பேசினார். 
   
  கலைஞருக்கு அரசியல் தெரியாது, நிர்வாகம் தெரியாது, சட்டத்தை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. அவர் எப்படி 5 முறை…
   
 • கடுமையாக விமர்சிப்பேன்!

  img
  நான் அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் கடுமையாக விமர்சிப்பேன். ஆனால், எந்தத் தலைவர் மீதும் தனி மனிதத் தாக்குதலை மேற்கொண்டது கிடையாது. ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை என்னைப் போல் யாரும் விமர்சித்ததில்லை. அதேபோல், எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்றோரையும் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால், காங்கிரஸ், அதிமுக, திமுகவின் நிர்வாகிகளோ, தொண்டர்களோ என்னை மிரட்டியது கிடையாது.
   
  மதிமுகவை தடை செய்வதாகக் கூறி சுப்பிரமணியன்…
   
 • அபராதம் கட்டியிருப்பார்!

  img

  காமராஜர், மூப்பனாரின் தியாகங்களை முன்னிறுத்துவோம் என திருச்சி பொதுக்கூட்டத்தில் வாசன் பேசியுள்ளார். காமராஜர் செய்த தியாகங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால், மூப்பனார் என்ன தியாகம் செய்தார்? வேண்டுமானால் காரை அதிவேகமாக ஓட்டி அபராதம் கட்டியிருப்பார். அதைத் தியாகம் என்கிறாரா? என்பது தெரியவில்லை. வாசனை மட்டுமல்ல, மூப்பனாரையும் சாதாரண மக்களுக்குத் தெரியாது.

  - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

   
 • எதிரி இல்லை!

  img
  மு.க.ஸ்டாலினை எப்போதுமே என்னுடைய எதிரி என்று கூறியது இல்லை. அவருடன் பிரச்னை என்று கூறியதும் இல்லை. என்னுடைய ராஜிநாமா கடிதம் திமுகவின் பொருளாளராக இருந்த ஸ்டாலினுக்கும் சென்றிருக்கும். இப்போதுகூட எங்காவது ஸ்டாலினைப் பார்த்தால், அவருக்கு வணக்கம் சொல்லமாட்டேன் என்பதெல்லாம் இல்லை. அந்தப் பண்பாடு, மரியாதை என்றைக்கும் இருக்கும். சிலர் எல்லா விஷயத்துக்கும் கண், காது வைத்து உருவகப்படுத்துவர். அதற்கு நான் பொறுப்பாக முடியாது.
   
   
   
 • மெழுகுவர்த்தியாக உருகுகிறது!

  img

  காமராஜ் பெயரை உச்சரிக்க வேண்டாம் என்றால் அரசியல்  களத்தில் காணாமல் போவார்கள். அதனால்தான் காங்கிரஸ் மெழுகுவர்த்தியைப் போல் உருகிப்போய்க்கொண்டிருக்கிறது. அரசியலில் எளிமை, நம்பிக்கை, நாணயம், நேர்மை,  வெளிப்படையான தன்மை தேவை போன்ற நிலைப்பாட்டை  முன்னிறுத்தி களம் காணும் நிலைக்கு வந்துவிட்டோம்.

  - புதுக்கோட்டையில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது...

   
 • மார்தட்டுவதா?

  img

  மீனவர்கள் விடுதலைக்கு தாங்கள்தான் காரணம் என சிலர் மார்தட்டிக் கொள்வது தமிழக மீனவர்களை கொச்சைப்படுத்துவதாகும்.தங்களால்தான் இது நடைபெற்றது என்று இங்கே தமிழகத்தில் கூறிக்கொள்ளும் ஒருசிலர், கடந்த மூன்று ஆண்டுகளாக இது பற்றி என்ன நடவடிக்கை எடுத்தனர்?எனவே, உண்மையான மீனவ நண்பன் யார் என்பது தமிழக மீனவர்களுக்கு நன்கு தெரியும். 

   

  - 5 மீனவர்களின் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட…

   
 • அம்மா வழி கடிதம்!

  img
   

  எந்தப் பிரச்னையாக இருந்தாலும் பிரதமருக்கு "அம்மா வழியில்" கடிதம் ஒன்றினை எழுதி விட்டால் பிரச்னை முடிந்ததாக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கருதுகிறார். பன்னீர் செல்வத்திற்கு அமைச்சரவையையும், சட்டப் பேரவை யையும் கூட்டுவதற்கு எண்ணம் கூட இருக்கலாம். ஆனால் அப்படிக் கூட்டினால் என்னவாகுமோ, இருக்கும் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று எண்ணுகிறார் போலும்! அந்தப் பயத்தைப் போக்கிக் கொண்டு தமிழ்…

   
 • சட்டப்படி சரி; கலாசாரப்படி தவறு!

  img
  பொது இடங்களில் முத்தம் கொடுப்பதைத் தடுப்பது தங்களின் சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று கூறிக் கொண்டு கேரளத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அன்பு முத்தம் என்ற பெயரில் பொது இடங்களில் கூடி கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
   
  மற்ற மாநிலங்களுக்கும் பரவிய இப்போராட்டம் இப்போது தமிழகத்திலும் தலையை நுழைத்துள்ளது. சுதந்திரம் எது?, பாதுகாப்பு எது? என்பதை அறியாமலேயே ‘சுதந்திரத்தை பாதுகாக்கிறோம்’ என்ற பெயரில்…
   
 • நா காக்க! நா காக்க!

  img

  ஓ.பன்னீர்செல்வம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, 2002 மார்ச் 1-ம் தேதி வரை பொறுப்பிலே இருந்தபோது, சட்டப்பேரவையை ஒரு முறையாவது கூட்டியது உண்டா? பொதுவாக மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் மாறி, வேறொருவர் முதல்வர் பதவிக்கு வருகின்றபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சட்டப் பேரவையைக் கூட்டி, மாறுதலுக்கான தன்னிலை விளக்கத்தை அளித்து, நாட்டிலே நிலவும் அவசர முக்கியத்துவமான பிரச்சினைகளைப் பற்றியெல்லாம்…

   
 • வேறு வழியைக் கண்டுபிடித்துவிட்டார்!

  img

  ''மானங்கெட்ட அரசு என்றும் மோடியை இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளால் மதிமுக பொதுச்செயலர் வைகோ விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. எதிர்கால அரசியலுக்கு வேறுவழியை கண்டுபிடித்துவிட்டதால் அதற்கேற்ப பேசுவது போல வைகோவின் பேச்சு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக இதுவரை வைகோ அறிவிக்கவில்லை. எங்களது கூட்டணியில் இருப்பதை வைகோ தான் முடிவு செய்ய வேண்டும்.''

  - பிரதமர் நரேந்திர மோடி பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்ததற்காக மதிமுக…

   
 • எங்கிருந்தாலும் வாழ்க!

  img
  ‘‘காங்கிரஸ் என்பது ஒரு கூட்டுக் குடும்பம். அந்த குடும்பத்தில் இருந்து, வீட்டில் இருந்து வெளியேறிவிடாதீர்கள். நீங்கள் தனிக்கட்சி துவங்கியே ஆவேன், கட்சியில் இருந்து வெளியேறித் தான் தீருவேன் என்று சொன்னால், பிறகு அண்ணா சொன்னதைப் போல எங்கிருந்தாலும் வாழ்க என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்’’
  ஜி.கே. வாசன் விலகல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது
   
 • மதிப்பும் இல்லை;மரியாதையும் இல்லை!

  img

  ''பதவி பெற்றவர்கள் கட்சிப் பணியாற்றுவதில்லை. கட்சிக்காக உழைப்பவர்களுக்குப் பதவி கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. மாநிலத் தலைவர் பதவியை கட்சி மேலிடம் முக்கியப் பதவியாக கருதுவதில்லை. மாநில உணர்வுகள், மாநிலப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் மாநிலத் தலைவரான எனக்குத் தெரியாமல் ஒரு கட்சியுடன் கூட்டணிப் பேச்சு நடத்தினார்கள். அதுபோல எனக்குத் தெரியாமலேயே மாநிலப் பொதுச் செயலாளராக ஒருவரை நியமித்தனர். இதுபோல மதிப்பும், அதிகாரமும் இல்லாமல்…

   
 • எவ்வளவு அக்கறை!

  img

  உயர்நீதிமன்றம் அளித்த பொதுவான உத்தரவை தூக்கிப் போட்டதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்...கிரானைட் குறித்த முறைகேடுகள் வெளியே வந்து விடக்கூடாது என்பதில் அ.தி.மு.க. அரசு எந்த அளவுக்கு அக்கறையாக உள்ளது என்பதை!

   

   

  (கிரானைட் முறைகேடு விசாரணை குறித்த விசாரணைக்கு சகாயம் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்காததை கண்டித்து உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தது. அதையொட்டி திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்)

   
 • நெஞ்சம் கொதிக்கிறது!

  img

  இராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று சொல்வதைக் கேட்டாலே நெஞ்சம் கொதிக்கிறது! ஜாலியன் வாலாபாக்கிலே படுகொலை நடத்தினானே ஜென்ரல் டயர் அவனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கச் சொன்னால் எப்படியோ! அதுபோன்றதுதான் இராஜபக்சேவுக்கு விருது கொடுக்கச் சொல்வது. இப்படிச் சொன்னதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையோ, பிரதமரோ இதுவரை கண்டித்தார்களா? இல்லை. அவரது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

   
 • சுவிஸ் வங்கி!

  img

  சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள தனிப்பட்ட தலைவர்களை காங்கிரஸ் கட்சியுடன் முடிச்சுப் போடும் வேலையை யாரும் செய்யக்கூடாது.

  -காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில்

   
 • அஞ்சப்போவதில்லை!!!

  img

  எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என் வாழ்வில் எத்தனையோ சோதனைகளை நான் சந்தித்து வந்திருக்கிறேன். அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறேன். உங்கள் அன்பும் தமிழக மக்களின் பேராதரவும் எனக்கு இருக்கும் வரையில் எதைக் கண்டும் நான் அஞ்சப் போவதில்லை.

  -அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்

   
 • விரும்ப மாட்டார்!

  img

  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் ஜெயலலிதா விரும்ப மாட்டார்.

  -தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

   
 • அடிப்படை!

  img

  அகிம்சைதான் எங்களின் அடிப்படை தத்துவமாக உள்ளது. இந்தியாவில் நிலவும் அனைத்து தீவிரவாதமும்  ஏற்றுமதி செய்யபட்டவையே. இந்தியாவில் எந்த தீவிரவாதமும் வளர்ந்தது கிடையாது.

  - அமெரிக்காவில் நரேந்திர மோடி பேச்சு

   
 • வீணாகாமல் இருந்திருக்கும்!

  img
   
  உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் ஆளும் கட்சியைச் சார்ந்த நபர்களையே நியமனம் செய்து, வெற்றி பெற்றவர்களாக அறிவித்திருக்கலாமே, இதன் மூலம் மக்களின் வரிப்பணம், காலநேரம் என எதுவுமே வீணடிக்கப்படாமல் இருந்திருக்கும்.
  -தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை
   
   
 • அடி ஒற்றி!!

  img

  தலைவரையும் இந்த இயக்கத்தையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் தலைவரின் அடி ஒற்றி நடப்பவன்.

  -திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

   
 • கோபமாகத்தான் இருப்பார்!

  img

  ஜெயலலிதாவைப் பொறுத்தவரை என்மீது கோபமாகத்தான் இருப்பார். காரணம் அவர் மீது ஊழல் வழக்குப் போட்டு அவருடைய செயல்பாடுகளை வெளியுலகத்துக்கு நான் தான் கொண்டுவந்தேன்.

  -சுப்ரமணியசாமி ஒரு பேட்டியில்

   
 • பொறுமை

  img

  நீங்கள் எல்லோரும் ஒருமுறை பார்த்து, “தூ” என துப்பிய படத்தை கூட நான் நான்கு முறை பார்க்கிறேன்.நான் எவ்வளவு பொறுமையானவன் ?

  - இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நிகழ்ச்சியில்

   
 • கருதுகிறோம்!

  img

  இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான இணைய தளத்தில் வந்திருக்கும் அவதூறுச் செய்தி என்பதை ஒரு தாயை தவறாகப் பேசியதாகவே கருதுகிறோம்

  -நடிகர் விஜய் நடிகர் சங்கம் இலங்கை அரசைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசியது

   
 
1 2 3 4 5 6 7 8 9 Next 9

 

 

 

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...