???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குண்டர் சட்டம் பயன்பாடு: மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: சனல் குமார் சசிதரன் அறிக்கை! 0 ராஜினாமா செய்தார் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே! 0 நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு மந்திரி சபை ஒப்புதல்! 0 கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்: விஷால் அறிக்கை! 0 ஆவணப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை வழங்க முடியும்: ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் நேர்காணல்! 0 கந்துவட்டி கொடுமை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் தற்கொலை 0 மனங்கள் இணையவில்லை என்பது அடிமட்ட தொண்டர்களின் கருத்து: மைத்ரேயன் 0 மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2-ம் தேதிக்கு மாற்றம்! 0 போய்ஸ் கார்டனில் சோதனை நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி: செங்கோட்டையன் திட்டம் 0 பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும்: நீதிமன்றம் 0 சத்துணவு முட்டை நிறுத்தமா?: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை 0 புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 
 • சாதிக் கட்சி அல்ல!

  img

  தமிழக மக்களின் இன, மொழி, உரிமைகளுக்காக தொடர்ந்து 26 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன். எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அங்கு சென்று போராட்டம் நடத்துபவன் நான். நாங்கள் பலமுறை பதில் தந்துவிட்ட நிலையிலும், பாமகவை சாதிக் கட்சி என்றழைக்கின்றனர். மேற்கண்ட போராட்டங்கள் ஒரு சாதிக்காக நடத்தப்பட்டதா?  தமிழகத்தில் உள்ள 49 கட்சிகள் என்ன செய்துள்ளன? நாங்கள் தமிழகத்தில் உள்ள 370 சாதிக்களுக்குமான கட்சி. அனைவருக்கும் இட ஒதுக்கீடு கோரி போராடி…

   
 • த்தூ..

  img


  “அதிமுக ஆட்சியைப் புடிக்குமா?”

  “2016ல் அதிமுக ஆட்சியைப் புடிக்காது. இந்தக் கேள்விய நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்பீங்களா?

  பத்திரிகைக் காரங்கன்னா என்னய்யா த்தூ”

  - சென்னை மத்திய கைலாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஜயகாந்த் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு அளித்த பதில்...

   
 • நாடே வேண்டாம்

  img

  என்ன தவறு செய்தார் சிம்பு? அது, ஒரு தூக்கி எறியப்பட்ட பாடல், ‘பீப்’ பாடல். அதை திருடி வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்காக என் பையன் உயிர் வேண்டுமா? அல்லது என் உயிர் வேண்டுமா? எடுத்துக்கொள்ளுங்கள். என்னை தூக்கில் போடுங்கள். எங்களுக்கு இந்த  நாடே வேண்டாம். நாங்கள் கேரளாவுக்கோ, கர்நாடகாவுக்கோ போய் விடுகிறோம். எங்களை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நன்றி..

  • சமூக வலைத்தளங்களில் மூலம்…
   
 • மனம் புண்பட்டிருந்தால்?

  img

  தனிப்பட்ட முறையில் தமிழிசை சவுந்தரராஜனுடைய அரசியல் வளர்ச்சியைக்கண்டு மகிழ்ச்சியடைந்ததோடு, அவர் மீது அன்பையும், பாசத்தையும் வைத்திருக்கிறேன். நான் பேசிய ஒப்பீட்டை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் அவரது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

  - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

   
 • வாட்ஸ் ஆப் நிவாரணமா?

  img

  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அந்த வாட்ஸ் ஆப் பேச்சு தான் நிவாரணமா? தலைநகரமே தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த போது, முதலமைச்சர் ஜெயலலிதா மக்களை சந்தித்து ஆறுதல் கூறினாரா, பத்திரிகையாளர்களை சந்தித்தாரா?

  - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக முதல்வர் ஜெயலலிதா கூறிய ஆறுதலுக்கு கருணாநிதி அறிக்கை

   
 • திமுக-அதிமுகவின் நாடகம்!

  img

  தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழை வெள்ளம், தற்போது டெல்டா மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை. தண்ணீரை சேமிக்கவும், மழைநீர் வடிகால்களை முறையாக அமைக்காததும், இயற்கையான நீர்வழிப்பாதைகளை மூடியதன் விளைவே சென்னை மாநகர பாதிப்பிற்கு காரணமென டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் அதிமுக, திமுக ஆட்சிகளை குற்றம் சாட்டியுள்ளது.

  மழை வெள்ள பாதிப்புகளை களைந்திட, தொலைநோக்குப் பார்வையில் எவ்வித நிரந்தர…

   
 • நான் இந்திரா காந்தியின் மருமகள்

  img

  இந்த விவகாரத்தில் தீர்ப்பளிப்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன். நான் ஏன் பயப்பட வேண்டும்? நான் இந்திரா காந்தியின் மருமகள், நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்

  -நேஷனல் ஹெரால்டு செய்தி நிறுவனம் தொடர்பான வழக்கு குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

   
 • அராஜகம்

  img

  அதிமுக ஆட்சியில், தமிழகத்தின் வளர்ச்சியை, இருபதாவது இடத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு சென்றிருப்பதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றச்சாட்டியுள்ளார்.

  இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பரப்புரையின்போது, தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றப்போவதாக முழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியா டுடே பத்திரிக்கை ஆய்வு குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?. தினமலர், ஆனந்த விகடன் பத்திரிகைகளை பறிமுதல் செய்த அதிமுகவினர், இந்தியா டுடே பத்திரிக்கையை விட்டு…

   
 • கைப்புண்ணுக்குக் கண்ணாடி

  img

  அ.தி.மு.க. ஆட்சி இன்னும் ஐந்து மாதங்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், எந்தவிதமான கேள்விகளுக்கும் பதில் தராததிலிருந்து, இப்படிப்பட்ட தவறுகளுக்கெல்லாம் ஜெயலலிதா அரசிலே இருப்போரும், அவர்களது அரவணைப்பிலே வாழ்ந்து வருவோரும், அவர்களது உறவினர்களும் தான் முழு முதற்காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது அல்லவா? கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு என்பதால் தானே தமிழக மக்கள் உரிய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்!

  - திமுக தலைவர் மு. கருணாநிதி அறிக்கை

   
 • உயிருக்கு ஈடாகுமா?

  img

  தமிழகத்தில் புயல் காரணமாக கனமழை கொட்டும், சூறாவளி காற்று வீசும்‌, பலத்த சேதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் பல நாட்களாக எச்சரித்தும்‌, தமிழக அரசின் மெத்தனத்தால் கடலூர் மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்ததற்கு முழு பொறுப்பையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தான் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்‍. இயற்கையின் சீற்றத்தை தடுக்க முடியாது என்றாலும்‌, அதிமுக அரசு முன் எச்சரிக்கையுடன் சமயோசித நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு…

   
 • தமிழ்நாட்டு மக்களுக்காக

  img

  தான் வாழ்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் என்று கட்சியின் உடன்பிறப்புகளுக்கு “நீலிக் கண்ணீர்” கடிதம் எழுதிய ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் எப்படி யெல்லாம் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கி விட்டன. முன்பு தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தவர்கள் இப்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியிருக்கிறார்கள். இவ்வாறு கோடிக்கணக்கிலே இந்தச் சொத்துக்களை வாங்குவதற்கு பின்னால்…

   
 • குறை சொல்லமாட்டேன்

  img

  இலவசங்களை குறை சொல்லமாட்டேன், ஆனால் தரமான பொருட்களாக வழங்க வேண்டும். இங்கு உடைந்த மிக்சி, மின்விசிறி, கிரைண்டரை எடுத்து வந்துள்ளீர்கள்.

  • எடப்பாடியில் மகளிருடன் கலந்துரையாடியபோது மு.க.ஸ்டாலின்.
   
 • என்னையே கேட்குறீங்களே!

  img

  சட்டப்பேரவைத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற தேமுதிக விரும்பவில்லை. கடந்த காலங்களில் பல கட்சிகள் வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளார்கள். கொடநாடு செல்ல முடிந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால், கலாமின் நினைவிடத்திற்கு வரமுடியாதது ஏன்? என்னை மட்டும் கேள்விக் கேட்கிறீர்களே, அவங்ககிட்டேயும் கேளுங்க...


  மறைந்த அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பேக்கரும்பு பகுதியில் மரியாதை செலுத்திய…

   
 • எல்லாம் கிராஃபிக்ஸ்!

  img

  நான் யாரையும் அடிக்கவில்லை. மக்களை சந்திக்க இடையூறாக இருக்க வேண்டாம் என நான் கட்சியினரை அதட்டியது உண்மைதான். ஆனால் நான் அடித்ததாக திட்டமிட்டு கிராபிக்ஸ் செய்து விடியோவை பரப்பி வருகிறார்கள்

  - திமுக பொருளாளர் ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் பரவும் விடியோ குறித்து விளக்கம்

   
 • நாடகம் பலிக்காது

  img

  தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் மக்களை சந்திக்கும் மு.க.ஸ்டாலினின் நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது!

  - ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ்

   
 • வாழ்வையே அர்ப்பணிப்பேன்!

  img

  தமிழகத்திற்காகவும், தமிழக மக்களின் நலனை காக்கவும், என் வாழ்நாள் முழுவதையுமே அர்பணிக்கத் தயார். சிறுபான்மை மக்கள்,ஒடுக்கப்பட்டோர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் எக்காலத்திலும் மதிமுக துணை நிற்கும்

  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், மதிமுக சார்பாக திராவிட இயக்க நூற்றாண்டு விழா, மற்றும் அண்ணா 107வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியது...

   
 • கூட்டணி

  img

  கூட்டணிக்கு இப்போதைக்கு என்ன அவசரம். நேரு, அண்ணா போன்ற தலைவர்கள் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கூட்டணி பற்றி பேசலாம் என சொல்லி இருக்கிறார்கள். யாருடன் கூட்டணி என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு முடிவு செய்து கொள்ளலாம்.

   
 • அதிமுகவின் மாநாடா?

  img

  சென்னையில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, அதிமுகவின் கட்சி மாநாடு போன்ற தோற்றத்தைத் தருகிறது...


  - திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

   
 • நம்பி இல்லை!

  img

  கருத்துக்கணிப்பை நம்பி திமுக அரசியல் நடத்தவில்லை!

  - லயோலா கருத்துக் கணிப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

   
 • மன்னிப்பா..?

  img

  பாஜக மேலிட தலைவர்கள் ஜெயலலிதாவை அவ்வப்போது சந்திக்கிறார்கள். இங்குள்ள பாஜக தலைவர்கள் எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள் என்பதற்காகத்தான் கள்ள உறவு என்ற வார்த்தையை கூறினேன். நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. எனவே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கையும் சந்திப்பேன்.

  - பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்

   
 • ஆணவப்போக்கு...

  img

  தமிழகமே ஒரு போர்க்களம் போல் காட்சியளிக்கின்ற நேரத்தில், எதுவுமே நடக்காதது போல மக்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப்போன்று தனக்கே உரிய ஆணவப்போக்கோடு ஜெயலலிதா உரையாற்றி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

  முதலமைச்சரின் சுதந்திர தின விழா உரை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை...

   
 • எதிர்காலம் இல்லையா?

  img

  திராவிட இயக்கம் தேய்ந்து விட்டது என்றும், தி.மு.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்றும் இந்த நாட்டில் இருப்பவர்கள் நினைத்தார்கள் என்றால், அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன், சட்டமன்ற தேர்தல் உங்களுக்கு விடை சொல்லும்.

  யாரை கண்டும் நாங்கள் பயப்படவில்லை. எங்களை நாங்கள் திடப்படுத்திக்கொள்கிறோம். நாங்கள் வெகுளிகள் அல்ல, ஏமாளிகள் அல்ல, சில நேரங்களில் ஏமாளிகள் போல் தோன்றும். தேர்தலில் பெறும் வெற்றியை பார்த்து அவர்கள் அதிசயிப்பார்கள்.

   
 • உடல்நிலை காரணமாக...

  img

  அப்துல் கலாம் இறுதிச் சடங்கில் பங்குகொண்டு எனது மரியாதையை செலுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இருப்பினும், எனது உடல்நிலை காரணமாக என்னால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை.

  - ராமேஸ்வரத்தில் நடைபெறும் அப்துல் கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை...

   
 • மதுவை ஒழிக்க வந்த காந்தி!

  img

  நாங்கள் அண்ணல் காந்தியடிகளை பார்த்ததில்லை. எங்களைப் பொறுத்தவரை மதுவை ஒழிக்க வந்த காந்தி மருத்துவர் அய்யா அவர்கள்தான்.

  - பாமக தலைவர் ஜி.கே.மணி அறிக்கை...

   
 • பணப்புழக்கம் இல்லை!

  img

  நிலத்தை விற்க கூடிய புரோக்கர்கள் என்னை சந்தித்தனர். வீடுகளை விற்க , நிலங்களை விற்க பலர் முன் வருகின்றனர். ஆனால் வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. பணப்புழக்கம் முடக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வருமானம் இல்லை என்று என்னிடம் பலரும் வருத்தம் தெரிவித்தனர். இவர்களுக்கு நான் ஆறுதல் தெரிவித்தேன். விவசாய பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். விவசாயம் மடிந்து போச்சு. நிலத்தை விற்கவாவது செய்வோம் என்றால் இதனை வாங்க ஆள் இல்லை. இது…

   
 
1 2 3 4 5 6 7 8 9 Next 9

 

 

 

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...